வால்பாறை: கோடை வெயிலின் கடும் வெப்பத்தினால் தகித்திருந்த வால்பாறை மக்களுக்கு இன்று மாலை திடீரென பெய்த பலத்த மழை வெப்பத்தை தணித்தது. அதனால், மக்கள் அளவற்ற ஆனந்தம் அடைந்தனர்.

வால்பாறையில் கடந்த வாரம் வரை கோடை வெயிலால் கடுமையான வெப்பம் இருந்து வந்தது. இதனால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். கோடை காலத்து மழை பெய்யாத காரணத்தினால் ஆறுகள், ஓடைகள் முற்றிலும் வறண்டு காணப்படுகின்றன. இந்தநிலையில், கடந்த சில தினங்களாக மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்து வந்தது.
இன்று மாலை திடீரென பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக வால்பாறை பகுதியில் கோடை வெப்பம் முற்றிலும் தணிந்து மிதமான பருவநிலை நிலவுகிறது. இதனால், வால்பாறை பகுதிகளில் நிலவும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து ஒரு சில தினங்களுக்கு மழை பெய்ததால் தேயிலைச் செடிகளின் வளர்ச்சி அதிகரித்து, உற்பத்தி அதிகரிப்பதோடு, தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளும் பெருகும் என்று தொழிலாளர்கள் தெரிவித்தனர்.