கோயில்‌ சொத்துகள்‌ விவகாரம்‌: தமிழக அரசுக்கு சத்குரு பாராட்டு

கோவை: கோயில்களின்‌ சொத்துகள்‌ குறித்த ஆவணங்கள்‌ இணையதளத்தில்‌ வெளியிடப்படும்‌ என்ற இந்து அறநிலையத்‌ துறையின்‌ முடிவிற்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர்‌ சத்குரு பாராட்டு தெரிவித்துள்ளார்‌.



கோவை: கோயில்களின்‌ சொத்துகள்‌ குறித்த ஆவணங்கள்‌ இணையதளத்தில்‌ வெளியிடப்படும்‌ என்ற இந்து அறநிலையத்‌ துறையின்‌ முடிவிற்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர்‌ சத்குரு பாராட்டு தெரிவித்துள்ளார்‌.

கோயில்களின்‌ சொத்துகள்‌ குறித்த ஆவணங்கள்‌ இணையதளத்தில்‌ வெளியிடப்படும்‌ என்ற இந்து அறநிலையத்‌ துறையின்‌ அறிவிப்பு தொடர்பாக சத்குரு இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர்‌ பதிவில்‌,

“அறநிலையத்துறைக்கும்‌ தமிழக அரசுக்கும்‌ பாராட்டுகள்‌ - சரியான திசையில்‌ எடுக்கப்பட்டுள்ள வரலாற்று நடவடிக்கை இது. மக்களின்‌ வேண்டுகோளை ஏற்று துரித நடவடிக்கை எடுத்தமைக்கு பாராட்டுகள்‌. வெளிப்படைத்‌ தன்மைதான்‌ நல்லாட்சிக்கான முதல்படி. நல்வாழ்த்துகள்‌.” என்று கூறியுள்ளார்‌.

https://twitter.com/SadhguruJV/status/1395253659609436164?s=1001

அந்த ட்வீட்டில்‌ தமிழக முதல்வர்‌ மு.க.ஸ்டாலின்‌ மற்றும்‌ அறநிலையத்‌ துறை அமைச்சர்‌ சேகர்‌ பாபு ஆகியோரை டேக்‌ செய்துள்ளார்‌.

சத்குரு ‘கோயில்‌ அடிமை நிறுத்து' என்ற இயக்கத்தின்‌ மூலம்‌ அறநிலையத்‌ துறையின்‌ வரவு, செலவு கணக்குகளை வெளி தணிக்கை செய்ய வேண்டும்‌, ஆக்கிரமிக்கப்பட்ட கோயில்‌ நிலங்களை மீட்க வேண்டும்‌, கோயில்களுக்கு சொந்தமான கட்டடங்கள்‌ மற்றும்‌ நிலங்களுக்கு தற்போதைய சந்தை நிலவரத்திற்கு ஏற்ப வாடகை நிர்ணயித்து, அதை வசூலிக்க வேண்டும்‌ என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...

PMBJP திட்டத்தின் கீழ் கோவைக்கு ரயிலில் வந்த 1,300 டன் மானிய உர மூட்டைகள்

பிரதம மந்திரி பாரதிய ஜன உர்வராக் பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 1,300 டன் மானிய யூரியா உ...