நீலகிரி: கோத்தகிரியில் உலக படுகர்கள் அமைப்பு மூலம் நீலகிரி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு 6 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் அரசு தலைமை மருத்துவர் சிவக்குமார் முன்னிலையில் வழங்கப்பட்டன.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உலக படுகர்கள் அமைப்பு மூலமாக நீலகிரி அரசு மருத்துவமனைக்கு ஆறு லட்சம் ரூபாய் மதிப்பிலான இசிஜி மிஷின், ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் கோத்தகிரி அரசு தலைமை மருத்துவர் சிவக்குமார் முன்னிலையில் வழங்கப்பட்டன.

நீலகிரியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை சமாளிக்க பல்வேறு அமைப்புகளும் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளித்து வரும் நிலையில், உலக படுகர் அமைப்பு சார்பில் மேற்கொண்ட இந்த உதவி பொது மக்களுக்கு பயனுள்ளதாக அமைவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவர்கள் பார்த்திபன், சிவக்குமார் மற்றும் படுகர் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு வழங்கினார்கள்.