கோவை: பொள்ளாச்சியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தனியார் நிறுவன பொதுமேலாளர் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை வழங்கினார்.

பொள்ளாச்சி பல்லடம் சாலையில் உள்ள எஸ்.ஆர். லே-அவுட் பகுதியில் வசித்து வருபவர் சிவசுப்பிரமணியம்(84). இவர் பொள்ளாச்சி ஏபிடி மாருதி நிறுவனத்தில் பொது மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா நிவாரண நிதி கொடுக்க விருப்பம் உள்ளவர்கள் முன்வர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதற்காக ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையை திமுக நகர பொறுப்பாளர் டாக்டர்.வரதராஜனிடம் வழங்கினார்.

இதையடுத்து, சிவசுப்பிரமணியன் வழங்கிய ரூ.50 ஆயிரம் காசோலையை முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.