தடுப்பூசி செலுத்துவதில் எல்பிஜி சிலிண்டர் டெலிவரி செய்யும் நபர்களுக்கு முன்னுரிமை வேண்டும்... எல்பிஜி விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை..!

கோவை: அகில இந்திய எல்பிஜி விநியோகஸ்தர்கள் சங்கத்தினர், சிலிண்டர் டெலிவரி செய்யும் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.


கோவை: அகில இந்திய எல்பிஜி விநியோகஸ்தர்கள் சங்கத்தினர், சிலிண்டர் டெலிவரி செய்யும் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

தடுப்பூசி செலுத்துவதில் குறிப்பிட்ட அளவு முன் களப்பணியாளர்களுக்கு செலுத்துவதில் எல்பிஜி சிலிண்டர் டெலிவரி செய்யும் நபர்களுக்கு முன்னுரிமை அளிக்க கேட்டுக்கொள்கிறேன்.

அகில இந்திய எல்பிஜி விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் மாநிலத் தலைவரான பி.ராஜேந்திரா, கோவை சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனிடம் அளித்துள்ள கோரிக்கை கடிதத்தில், ‘‘இதுவரை தாங்கள்‌ மாநில அளவிலும்‌ அகில இந்திய அளவிலும்‌ ஆற்றிக்‌ கொண்டிருக்கும்‌ மக்கள்பணி, சேவை பாராட்டுக்கும்‌, போற்றுதலுக்கும்‌ உரியது.

நாங்கள்‌ எல்பிஜி வணிகத்தில்‌ இருந்தாலும்‌ வெயில்‌, மழை மற்றும்‌ தொற்று காலத்திலும்‌ இந்திய அளவில்‌ நாள்‌தோறும்‌ கோடிக்கணக்கான இல்லங்கள்‌ தேடி விநியோகம்‌ செய்வதன்‌ மூலம்‌ ஊரே ஊரடங்கில்‌ இருந்தாலும்‌ எங்களால்‌ முடிந்த சேவை ஆற்றும்‌ வாய்ப்பாக எண்ணி செய்து கொண்டிருக்கிறோம்‌.

இந்தத் தொற்றிலிருந்து காத்துக்‌ கொள்ள தடுப்பூசி போட்டுக்‌ கொள்வதுதான்‌ இன்றைய தேவை. நாங்கள், எங்கள்‌ பணியாளர்களுக்கு ‘முன்கள பணியாளர்கள்‌' என்ற அங்கீகாரம்‌ வேண்டும்‌ என்றும்‌ தடுப்பூசி போடுவதில்‌ முன்னுரிமை வேண்டியும்‌ மத்திய அரசையும்‌ மாநில அரசையும்‌ வேண்டிக்‌ கேட்டுள்ளோம்‌.

தாங்கள்‌ தயவு கூர்ந்து தமிழக முதல்வரிடமும்‌, மத்திய சுகாதார அமைச்சரிடமும்‌ எடுத்துரைத்து எங்கள்‌ பணி தொடர, எங்களுக்கு உதவ ஆவன செய்ய வேண்டி கேட்டுக்‌கொள்கிறோம்‌.'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

PMBJP திட்டத்தின் கீழ் கோவைக்கு ரயிலில் வந்த 1,300 டன் மானிய உர மூட்டைகள்

பிரதம மந்திரி பாரதிய ஜன உர்வராக் பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 1,300 டன் மானிய யூரியா உ...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...