கோவையில் அதிகரிக்கும் நோய்த்தொற்றை எதிர்கொள்ள உயர் அதிகாரிகள் குழு அமைக்க வேண்டும் - முதல்வருக்கு தொழில் அமைப்புகள் கூட்டு குழு கோரிக்கை!

கோவை: கோவை மாவட்டத்தில் தினமும் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த உயர் அதிகாரிகள் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என, தமிழக முதலமைச்சருக்கு மாவட்ட தொழில் வணிக அமைப்புகளின் கூட்டு குழு கோரிக்கை விடுத்துள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் தினமும் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த உயர் அதிகாரிகள் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என, தமிழக முதலமைச்சருக்கு மாவட்ட தொழில் வணிக அமைப்புகளின் கூட்டு குழு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அவ்வமைப்பு சார்பில் அனுப்பப்பட்டுள்ள கோரிக்கை கடிதத்தில் கூறியிருப்பதாவது,

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா நோய்த்தொற்று இரண்டாம் அலை பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம். கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தினமும் 3,000க்கும் மேற்பட்டோர் நோய்த்தொற்றால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நெருக்கடியான சூழ்நிலையை எதிர்கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகம் கூடுதல் பலம் பெற்று சிறப்பாக செயல்படும் வகையில் உயர் அதிகாரிகள் குழு ஒன்றை அமைக்க வேண்டும். இது எங்கள் தாழ்மையான கருத்து.

இதுதொடர்பாக தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் கோவை மாவட்ட வணிக அமைப்புகளின் கூட்டுக்குழு தனது முழு ஒத்துழைப்பையும் தர தயாராக உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...