கோவையில் கொரோனா பரவல் பீதியால் ஜாமீனில் வெளிவந்த 36 கைதிகள் தலைமறைவு..!

கோவை: கோவை சிறையிலிருந்து ஜாமினில் வெளியே வந்த 36 கைதிகள் கொரோனா பரவல் பீதியால் தலைமறைவாகியுள்ளனர்.


கோவை: கோவை சிறையிலிருந்து ஜாமினில் வெளியே வந்த 36 கைதிகள் கொரோனா பரவல் பீதியால் தலைமறைவாகியுள்ளனர்.

கோவை மத்திய சிறையில் சுமார் 1,700 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். நோய் பரவல் காரணமாக பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் நபர்கள் நேரடியாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்படுவது இல்லை.

மாறாக, இவர்கள் கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டு, நோய்கள் உள்ளதா எனக் கண்காணிக்கப்பட்டு 16 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் கோவை மத்திய சிறைக்கு கொண்டு வரப்படுகின்றனர்.

இந்நிலையில், கோவை மத்திய சிறையில் நீண்டகாலம் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் நோய் பரவியதால் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா காலங்களில் ஜாமீன் வழங்கப்பட்ட 40 கைதிகள் மாயமாகி விட்டனர். 4 பேர் மீண்டும் சிறைக்கு வந்து விட்டனர். இன்னும் 36 கைதிகள் கோவை சிறைக்கு வரவேண்டியுள்ளது.

இந்த நிலையில், தற்போது இரண்டாவது அலை உச்சகட்டத்தை எட்டியுள்ளதால் மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி சிறை நிர்வாகத்துக்கு விண்ணப்ப மனு கொடுத்துள்ளனர். இதற்கு, நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டது. தலைமறைவாக உள்ள 36 கைதிகளை பிடித்து மீண்டும் சிறையில் அடைக்க நீதிமன்றம் மூலமாக பிடிவாரண்டு உத்தரவு பெறப்பட்டுள்ளது. போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

Newsletter

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...