வால்பாறையில் கொரோனாவைக் கட்டுப்படுத்த சோதனைச்சாவடிகள் அமைக்கும் பணி தீவிரம்..!

வால்பாறை: கோவை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, வால்பாறை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.


வால்பாறை: கோவை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, வால்பாறை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.

கோவை மாவட்டம் வால்பாறை அதைச் சுற்றியுள்ள தேயிலைத் தோட்டப் பகுதிகளில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் காய்ச்சல் மற்றும் சளி பரிசோதனை முகாம் நடைபெற்று வருகிறது. இதன்மூலம் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், வால்பாறை நகரில் மக்கள் கூட்டம் அதிகம் கூடுவதால் கொரோனா தொற்று விரைவில் பரவும் அபாயம் உள்ளது. இந்தநிலையில், வால்பாறையில் மக்கள், கூட்டம் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்த்துவிட ஸ்டான் மோர் சாலை, நல்ல காத்து பாலம், நடுமலை பாலம், புதுத் தோட்டம் ஆகிய பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. நகருக்கு வருபவர்கள் அனைவரையும் சோதனை செய்து விசாரணைக்குப் பின் அவர் திருப்பி அனுப்பப்படுகின்றனர். அத்தியாவசியப் பணிகளுக்கு வருபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இந்தப் பணிகளை வால்பாறை வட்டாட்சியர் ராஜா, நகராட்சி பொறியாளர் வெங்கடாச்சலம், காவல் ஆய்வாளர் மகேஸ்வரி ஆகியோர் பார்வையிட்டனர்.

Newsletter

PMBJP திட்டத்தின் கீழ் கோவைக்கு ரயிலில் வந்த 1,300 டன் மானிய உர மூட்டைகள்

பிரதம மந்திரி பாரதிய ஜன உர்வராக் பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 1,300 டன் மானிய யூரியா உ...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...