கோவை அரசு கலைக் கல்லூரியில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கும் பணிகள்... அமைச்சர்கள் சக்கரபாணி மற்றும் ராமச்சந்திரன் நேரில் ஆய்வு..!

கோவை: கோவை அரசு கலைக் கல்லூரியில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய சிறப்பு கொரோனா சிகிச்சை மையம் அமைப்பதற்கான பணிகளை அமைச்சர்கள் சக்கரபாணி மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.


கோவை: கோவை அரசு கலைக் கல்லூரியில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய சிறப்பு கொரோனா சிகிச்சை மையம் அமைப்பதற்கான பணிகளை அமைச்சர்கள் சக்கரபாணி மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.



கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதிகொண்ட படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை குறைக்கும் நடவடிக்கையாக கோவை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய தற்காலிக கொரோனா சிகிச்சை மையத்துக்கான அரங்குகள் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.





இந்தநிலையில். கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளைக் கண்காணிக்க தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுவரும் கொரோனா சிகிச்சை மையத்துக்கான அரங்குகள் அமைக்கும் பணிகளை இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் நிர்மலா, கோவை மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன், மாவட்ட ஆட்சியர் நாகராஜன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். தொடர்ந்து சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு கல்லூரியிலும் கொரோனா சிறப்பு வார்டுகள் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...