கொரோனா பரவலை கட்டுப்படுத்த காய்கறி மார்க்கெட்டுகளுக்கு விடுமுறை அளிக்க தயார் - கோவை டி.கே.மார்க்கெட் வியாபாரிகள் அறிவிப்பு!

கோவை: கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் அரசின் விதிமுறைப்படி காய்கறி மார்க்கெட்டுகளுக்கு விடுமுறை அளிக்க தயாராக இருப்பதாக கோவை டி.கே.மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் அரசின் விதிமுறைப்படி காய்கறி மார்க்கெட்டுகளுக்கு விடுமுறை அளிக்க தயாராக இருப்பதாக கோவை டி.கே.மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா இரண்டாவது அலை கோரத்தாண்டவமாடி வரும் நிலையில், 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் மளிகை, காய்கறி மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கென காலை 6 மணி முதல் 10 மணி வரை கடைகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதிலும் பொதுமக்கள் கூட்டமாக சமூக விலகலை பின்பற்றாமல் இருப்பதால் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள டி.கே.மார்க்கெட் மொத்த காய்கனி விற்பனை நடைபெறும் இடத்தை கோவை மாநகராட்சி மத்திய மண்டல உதவி ஆணையர் சிவசுப்ரமணியம் ஆய்வு செய்து, வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு முக கவசங்கள் அணிவது மற்றும் சமூக விலகலை கடைபிடிக்க அறிவுறுத்தினார்.

இதனை தொடர்ந்து, கோவை டி.கே.மார்க்கெட் காய்கனி மொத்த வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மார்க்கெட்டிற்கு காய்கறிகள் வாங்க வரும் பொதுமக்கள் முக கவசங்கள் இல்லாமல் உள்ளே அனுமதிப்பதில்லை எனவும், குறிப்பாக குழந்தைகள் மற்றும் சிறுவர்களை மார்க்கெட்டிற்கு அழைத்து வர தடை விதித்துள்ளதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் அரசு கேட்டுக் கொண்டால் மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு விடுமுறை அளிக்கவும் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

Newsletter

PMBJP திட்டத்தின் கீழ் கோவைக்கு ரயிலில் வந்த 1,300 டன் மானிய உர மூட்டைகள்

பிரதம மந்திரி பாரதிய ஜன உர்வராக் பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 1,300 டன் மானிய யூரியா உ...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...