திருப்பூர்: ஊரடங்கு விதிகள் கடுமையாக்கப்பட்டதை தொடர்ந்து, திருப்பூரில் காவல்துறையினர் முக்கிய சாலைகளை அடைத்து ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு கடந்த 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு பிறப்பித்து உத்தரவு வெளியிட்டிருந்த சூழ்நிலையில், கடந்த 15ம் தேதி முதல் ஊரடங்கில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகள் சிலவற்றை குறைத்து, கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதனால், நேற்றைய தினம் முதல் இ-பதிவு முறையில் பதிவு செய்யாதவர்கள் வெளியே செல்வதற்கு அனுமதி இல்லை எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, இன்று திருப்பூர் நகரின் முக்கிய பகுதிகளில் சாலைகள் அடைக்கப்பட்டு காவல்துறையினர் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே சுற்றுகிறார்களா என்பதை ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கத் தொடங்கினர்.
மேலும், இ-பதிவு முறையில் பதிவு செய்தவர்கள் மட்டுமே சாலைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டு இ-பதிவு முறையில் பதிவு செய்யாதவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.