வால்பாறை அரசு கல்லூரியில் கொரோனா சிகிச்சை மையம்..!

வால்பாறை: கொரோனா பெருந்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, அரசு உத்தரவின்படி, வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரியில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.


வால்பாறை: கொரோனா பெருந்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, அரசு உத்தரவின்படி, வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரியில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தாலுக்கா அளவில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரியில் 100 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை ஒரு வார காலத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வால்பாறை நகராட்சி அதிகாரிகள், பொறியாளர்கள் கல்லூரி வளாகத்தைப் பார்வையிட்டு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து பணியைத் தொடங்கி உள்ளனர். வால்பாறை வட்டாட்சியர் ராஜா, வட்டார வளமைய தலைமை மருத்துவர் பாபு லட்சுமணன், கிராம நிர்வாக அலுவலர் விஜய் அமிர்தராஜ், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள் பார்வையிட்டு பணியை முடுக்கிவிட்டுள்ளனர்.

Newsletter

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...