வால்பாறை குடியிருப்புக்கு அருகில் குப்பைக் கிடங்கு... மாற்ற வேண்டி பொதுமக்கள் கோரிக்கை...!

கோவை: வால்பாறை குடியிருப்புக்கு அருகில் குப்பைக் கிடங்கில் குப்பை கொட்டியதால் நகராட்சி அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள், குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற கோரிக்கை வைத்தனர்.


கோவை: வால்பாறை குடியிருப்புக்கு அருகில் குப்பைக் கிடங்கில் குப்பை கொட்டியதால் நகராட்சி அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள், குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற கோரிக்கை வைத்தனர்.



கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் அண்ணா நகர், காமராஜ் நகர், எம்ஜிஆர் நகர், கலைஞர் நகர் மற்றும் வால்பாறை பகுதி துளசிங் நகர் போன்ற பகுதிகள் உள்ளன. இங்கு காலையில் குப்பைகளை நகராட்சி பணியாளர்கள் எடுத்து சிறுவர் பூங்கா பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில் கொட்டுவது வழக்கம். தற்போது சிறுவர் பூங்கா குடியிருப்புக்கு அருகில் இந்த குப்பைக் கிடங்கு உள்ளதால் துர்நாற்றம் வீசியும் மழைக் காலங்களில் அப்பகுதிகளில் இன்னும் அதிகமாக துர்நாற்றம் வீசுவதுமாக உள்ளது. மேலும், கொசுக்கள் அதிகம் உற்பத்தி ஆகி அப்பகுதியில் உள்ள மக்களுக்கு நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்த பொதுமக்கள், இன்று காலை வழக்கம் போல் ஒவ்வொரு பகுதியிலும் குப்பைகளைப் பெற்று நகராட்சி குப்பைக் கிடங்கில் கொட்டச் சென்ற வாகனத்தை மறித்த சிறுவர் பூங்கா மக்கள், குப்பைகளை அப்பகுதியில் கொட்ட விடாமல் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



பின்பு, காவல் துறையினரும் வட்டாட்சியரும் வந்து அப்பகுதியை ஆய்வு செய்து குப்பைகளை சரியான முறையில் பராமரிக்க குடியிருப்பு பகுதிக்கு அருகில் கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதால், வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். வால்பாறை பகுதியில் பசுமை இந்திய திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை, மக்கா குப்பை பிரித்தெடுக்க பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. குப்பைக் கிடங்கில் குப்பைகள் நிரம்பி வழிவதால், குப்பைக் கிடங்கிற்கு மாற்று இடம் தேர்வு செய்து பொதுமக்களுக்கு தொந்தரவு இல்லாமல் குப்பைகளைக் கொட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...