கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் யானை உடல்நிலையில் முன்னேற்றம் - கோவில் நிர்வாகத்தினர் தகவல்!

கோவை: கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் யானை, பல் வலியால் சரிவர உணவு உண்ணாமல் இருந்த நிலையில், தற்போது உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் யானை, பல் வலியால் சரிவர உணவு உண்ணாமல் இருந்த நிலையில், தற்போது உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

கோவை பேரூர் பட்டீஸ்வரர் சுவாமி கோவிலில், கல்யாணி (29) என்ற பெண் யானை வளர்க்கப்பட்டு வருகிறது. கடந்த ஐந்து நாட்களாக, கல்யாணி யானை சரிவர உணவு உண்ணாமல் இருந்தது.

இதனையடுத்து, கோவில் நிர்வாகத்தினர், கால்நடை மருத்துவரை வரவழைத்து, யானையை பரிசோதித்தனர். பரிசோதனையில், யானைக்கு பல்வலி இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், தற்போது, கல்யாணி யானை உடல்நலம் தேறி வருவதாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, அறநிலையத்துறை துணை ஆணையர் (பொ) விமலா கூறுகையில், 'கல்யாணி யானைக்கு, பல் வலியால், தாடை வீங்கி, சரிவர உணவு உண்ணாமல் இருந்தது. கால்நடை மருத்துவர் சுகுமார், யானையை பரிசோதித்து, மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது யானை உடல்நலம் தேறி வருகிறது. அத்திப்பழம் போன்ற சத்து நிறைந்த பழங்கள் வழங்கப்படுகின்றன,' என்று தெரிவித்தார்.

Newsletter

PMBJP திட்டத்தின் கீழ் கோவைக்கு ரயிலில் வந்த 1,300 டன் மானிய உர மூட்டைகள்

பிரதம மந்திரி பாரதிய ஜன உர்வராக் பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 1,300 டன் மானிய யூரியா உ...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...