கோவை: வால்பாறையில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி வெளியில் சுற்றிவரும் பொதுமக்களை கண்காணிக்க போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த கட்டுப்பாடுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியமான மளிகை காய்கறி பால் இறைச்சிக் கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை திறந்து வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, 10 மணிக்கு கடைகள் அடைக்கப்பட்டாலும் வால்பாறை பகுதியில் தேவையின்றி இருசக்கர வாகனத்தில் அடிக்கடி சுற்றுபவர்கள் உள்ளனர். அதேபோல், பொழுதுபோக்காக சாலையில் நடமாடிக் கொண்டுள்ளனர்வகளும் உள்ளனர்.

இந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த வால்பாறை காவல்துறையினர் வால்பாறை தபால் நிலையம், அண்ணா சிலை, பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை வளாகம், ஸ்டான்மோர் சந்திப்பு ஆகிய இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். தேவையின்றி சுற்றுபவர்களுக்கு எச்சரிக்கை செய்தும், அடிக்கடி சுற்றுபவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.