பொள்ளாச்சியில் இன்று 120 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல்!

கோவை: பொள்ளாச்சியில் இன்று 120 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


கோவை: பொள்ளாச்சியில் இன்று 120 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனோ வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டு வருகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்துக் கொண்டு வருகிறது.

இந்த நிலையில், பொள்ளாச்சி பகுதியைப் பொறுத்தவரை இன்று நகரப்பகுதியில் 47 பேருக்கும், தெற்கு ஒன்றியத்தில் 38 பேருக்கும், வடக்கு ஒன்றியத்தில் 35 பேருக்கும் என மொத்தம் இன்று ஒரே நாளில் 120 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனை மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து பரவல் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

Newsletter

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...