கோவை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதிகளுடன் இரு பேருந்துகள்... தனியார் தொண்டு நிறுவனங்கள் வழங்கின..!

கோவை: கொரோனோ நோயாளிகளுக்கு பயனளிக்கும் வகையில், ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய இரு பேருந்துகளை தனியார் தொண்டு நிறுவனங்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு வழங்கியுள்ளன.


கோவை: கொரோனோ நோயாளிகளுக்கு பயனளிக்கும் வகையில், ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய இரு பேருந்துகளை தனியார் தொண்டு நிறுவனங்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு வழங்கியுள்ளன.



கோவையில் நாளுக்கு நாள் கொரோனா பெருந்தொற்றின் வேகம் அதிகரித்து வரும் நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் உள்ள படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. மேலும், சிகிச்சை பெறுவதற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் ஆம்புலன்ஸில் காத்திருக்கும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் இல்லாமல் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.





இந்தநிலையில், படுக்கைக்காக, ஆக்சிஜன் இல்லாமல் அரசு மருத்துவமனை வாயிலில் காத்திருக்கும் நோயாளிகளுக்காக, கே.ஜி.ஐ.எஸ்.எல் நிறுவனம் மற்றும் தொழில் முனைவோர் கூட்டமைப்பு இணைந்து ஆக்சிஜன் வசதியுடன் கூடிய இரு பேருந்துகளை கோவை அரசு மருத்துவமனைக்கு வழங்கியுள்ளது. பேருந்துக்கு 12 பேர் வீதம் 24 நோயாளிகள் சிகிச்சை பெறும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள இந்த பேருந்து கோவை அரசு மருத்துவமனையில் நிறுத்தப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் எனவும் இந்த பேருந்துகளில் ஆக்சிஜன் அளவு குறையும் போது சேவா கேசஸ் நிறுவனம் அவ்வப்போது ஆக்சிஜன் நிரப்பித் தருவதாகவும் கூறியுள்ளதாக கோவை அரசு மருத்துவமனை முதல்வர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...