கோவை: கோவை தொண்டாமுத்தூர் தொகுதியின் கரும்புக்கடை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி மக்கள் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துவுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியனிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை: கோவை தொண்டாமுத்தூர் தொகுதியின் கரும்புக்கடை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி மக்கள் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க, திமுகவின் கார்த்திகேய சிவசேனாபதி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துவுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியனிடம் மக்களின் சார்பில் கோரிக்கை வைத்துள்ளார்.
கோவை தொண்டாமுத்தூர் தொகுதியின் கரும்புக்கடை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி மக்கள், கோரியுள்ள கோரிக்கை மனுவில்,
'கோவை தொண்டாமுத்தூர் தொகுதியின் கரும்புக்கடை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் மக்கள் தொகை நிறைந்த இடமாகும். அப்பகுதி மக்கள் தங்களின் அடிப்படை மருத்துவத்திற்குக் கூட அவர்களின் பகுதியை விட்டு சில கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் மருத்துவமனைகளை அணுக வேண்டிய சூழல் உள்ளது. எனவே, அங்கிருக்கும் மக்கள் தங்களது பகுதியிலேயே அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றை அமைத்து தர வேண்டும் என்றும் மக்களுக்கு மருத்துவத் தேவைகள் எளிமையாக கிடைக்கும் வண்ணம் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கடந்த பத்தாண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மேலும், தற்போது இந்தக் கொரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் அரசு மருத்துவமனைகளின் தேவையை நாம் அனைவரும் உணர்ந்துள்ளோம்.
எனவே, கரும்புக்கடை பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று அங்கே அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து மக்களை பயன்பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். மதிப்பிற்குரிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்களுக்கு இதை வேண்டுகோளாக வைக்கிறோம்.' என்று கோரியுள்ளார்.