கோவை: கோவை பீளமேடு அரசு மருத்துவக் கல்லூரியில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நிறுத்தப்பட்டதால், மருந்து வாங்க வந்த நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவமனை முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து கடந்த எட்டாம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. ரெம்டெசிவிர் வாங்க வருபவர்களின் கூட்டம் மாநிலம் முழுவதும் அதிகரித்ததைத் தொடர்ந்து மருந்து தேவைப்படும் நோயாளிகள் சிகிச்சை பெறும் மருத்துவமனைகளுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும் என்ற தமிழக அரசு அறிவித்தது. அதற்கான உடனடி நடவடிக்கைகளையும் எடுத்த தமிழக அரசு, நாளை முதல் மருந்து விநியோகத்தை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழக அரசின் அறிவிப்பை அடுத்து கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் இன்று ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நிறுத்தப்பட்டது. இதனால் இன்று மருந்து வாங்க வந்த நோயாளிகளின் உறவினர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தங்களுக்கு ரெம்டெசிவர் மருந்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி மருத்துவக் கல்லூரி முன்பாக அவினாசி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் காவல்துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நாளை முதல் சிகிச்சை பெறும் மருத்துவமனைகளுக்கு மருந்து விநியோகம் செய்யப்படும் என கூறிய காவல் துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து போகச் செய்தனர்.