கோவை மாவட்டத்தில் 200 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது - மாவட்ட நிர்வாக அதிகாரி தகவல்!

கோவை: கோவை மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து கொண்டே வருகிறது. தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3000க்கும் மேல் அதிகரித்துள்ளது. இதனால் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாநகராட்சி சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மாநகராட்சியில் மீண்டும் மருத்துவ முகாம், பரிசோதனைகள் அதிகரிப்பு, வீடுகள் தனிமைப்படுத்தல் உள்பட பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் சுகாதார துறையினர் மேற்கொண்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் சார்பாக கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரக பகுதிகளில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இது குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று கண்டறியப்படும் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், தெருக்களில் 3 வீடுகளுக்கு மேல் இருந்தால் அந்த வீதி தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் பொது மக்கள் பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்,' என்று தெரிவித்தார்.

Newsletter

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...