கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் மண் சரிவும் மரங்கள் விழுந்தும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வால்பாறை நகரின் ஒரு பகுதியாக உள்ள அண்ணா நகர் பகுதியில் நேற்று மாலை தடுப்பு சுவரின் மண் சரிந்து விழுந்ததில் கீழே உள்ள இரண்டு வீடுகள் சேதமடைந்தன. இந்த மண் சரிவினால் சிவகுமார், லட்சுமணன் ஆகிய இருவருடைய வீட்டின் பின்பக்கம் உள்ள குளியலறை கழிப்பறை சேதமடைந்தது.

இதன் காரணமாக அங்கு இருந்த பொருட்கள் சேதமடைந்தன. வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்றுவிட்டதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. வால்பாறை வட்டாட்சியர் ராஜா சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.
இது குறித்து வால்பாறை வட்டாட்சியர் ராஜா கூறுகையில், வால்பாறையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மண் சரிவு, மரங்கள் முறிந்து விழுதல் போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. ஆகவே, பொதுமக்கள் பாதுகாப்பு மிகுந்த இடத்தில் தங்கி இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.