வால்பாறையில் கனமழை காரணமாக ராட்சத மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு..!

வால்பாறை: கோவை வால்பாறையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் ராட்சத மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


வால்பாறை: கோவை வால்பாறையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, சாலையில் ராட்சத மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த நான்கு நாட்களாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து, மின்சாரம், தொலைத்தொடர்பு சேவை பாதிப்படைந்து சீராகி வருகிறது. இந்தநிலையில் வால்பாறை நகரை ஒட்டியுள்ள சவராங்காடு தேயிலைத் தோட்டத்தின் பிரதான சாலையில் குறுக்கே ராட்சத மரம் விழுந்தது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. சாலையின் குறுக்கே மரம் அடைத்துள்ளதால் கேட் வழியாக மக்கள் செல்ல முடியாமல் சுமார் இரண்டு கிலோமீட்டர் சுற்றி வால்பாறை நகருக்குச் சென்று வருகின்றனர்.

இதுபோல் பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. மேலும், வால்பாறை பொள்ளாச்சி பிரதான சாலையில் பல இடங்களில் மரங்கள் விழுந்துள்ளது. இவற்றை நெடுஞ்சாலைத் துறையினர் அவ்வப்போது அகற்றி வருகின்றனர். வால்பாறையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

Newsletter

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...