கோவையில் பழங்குடி மக்களின் வீடுகள் மழையால் சேதம்... நிரந்தர வீடுகளைக் கட்டித் தர கோரிக்கை..!

கோவை: கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து பெய்த மழையால், அங்குள்ள பழங்குடி மக்களின் வீடுகள் சேதம் அடைந்தன. நிரந்தர வீடுகளை கட்டித் தர சமூக ஆர்வலர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


கோவை: கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து பெய்த மழையால், அங்குள்ள பழங்குடி மக்களின் வீடுகள் சேதம் அடைந்தன. நிரந்தர வீடுகளை கட்டித் தர சமூக ஆர்வலர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் வீட்டின் குடிசைகள் காற்றில் பறந்தன. புயல் மற்றும் கடும் மழையினால் ஆனைமலை புலிகள் காப்பகத்திலுள்ள பழங்குடியினர் கிராம குடியிருப்புகளும் கடும் சேதம் அடைந்து உள்ளன. கோவை ஆனைமலை வன எல்லைக்கு உட்பட்ட 14 கிராமங்களில் நமக்கு தகவல் தெரிந்த வகையில் சின்னார்பதியில் 7 வீடுகளும், காட்டுபட்டியில் 7 வீடுகளும் சேதம் அடைந்துள்ளன. மற்ற கிராமங்களின் நிலைமை என்னவென்று தெரியவில்லை. தொடர்ந்து மழையும் காற்றும் பயங்கரமாக இருப்பதால், அவர்களைத் தொடர்புகொள்ள முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.



தமிழக அரசு இனிமேலும் காலம் தாமதிக்காமல் உடனடியாக புலிகள் காப்பக பகுதியில் வசிக்கும் பழங்குடிகளுக்கு தரமான வீடுகளை அமைத்து தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் வன ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்று தமிழக அரசு இந்தப் பழங்குடி மக்களுக்கு உடனடியாக நிரந்தர வீடுகள் கட்டித் தரும் என்கிற நம்பிக்கை மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

Newsletter

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...

PMBJP திட்டத்தின் கீழ் கோவைக்கு ரயிலில் வந்த 1,300 டன் மானிய உர மூட்டைகள்

பிரதம மந்திரி பாரதிய ஜன உர்வராக் பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 1,300 டன் மானிய யூரியா உ...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...