கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தநிலையில், தமிழக முதலமைச்சர் உத்தரவின் பேரில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொரோனா பரவல் அதிகம் உள்ள மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக கோவை வந்த அமைச்சர் கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனை, கோவை அரசு மருத்துவமனை, கொரோனா சிகிச்சை மையங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இக்கூட்டத்தில் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 9 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டனர், மேலும், மாவட்ட ஆட்சியர், மருத்துவமனை டீன், காவல் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‘‘தமிழகத்தில் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் மாவட்ட வாரியாக நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம். கோவையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் ஆலோசனைகளை வழங்கினார்கள். முதல்வர் கூறியது போல், மக்கள் இயக்கமாக செயல்பட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் பணிகளைத் தொடங்கி உள்ளோம். சென்னையைப் போல கோவை, சேலம், மதுரை, திருச்சியிலும் கொரோனா ‘வார் ரூம்' அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கோவையில் மிக விரைவில் ‘வார் ரூம்' அமைய உள்ளது. கோவையில் அமையும்போது கோவை மக்களுக்கு நிச்சயம் பயன் உள்ளதாக இருக்கும்'' என தெரிவித்தார்.
மேலும், ‘‘மக்களுக்கு அலைச்சல் இல்லாமல் மருத்துவ படுக்கை வசதிகள் குறித்தும் தெரிந்து கொள்ளலாம். 18 முதல் 45 வயதிற்குட்டவர்களுக்கு ரூ. 46 கோடி முன் பணம் செலுத்தப்பட்டு 15 லட்சம் டோஸ் தடுப்பூசி கோரப்பட்டுள்ளது. 5 லட்சம் வந்துள்ளது. இன்னும் இரண்டு நாட்களுக்குள் சென்னையில் அவை செலுத்தும் பணி தொடங்க உள்ளது. கொடிசியா 1500 கொரோனா பராமரிப்பு மையம் தயார் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில் 700 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மேலும், 800 படுக்கைகள் அமைக்க உள்ளோம். கொடிசியாவில் 100 படுக்கைகள் வசதியோடு சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி உள்ளிட்ட இயற்கை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
மேலும், ஐந்து இடங்களில் சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இயற்கை சிகிக்கை கொரோனா தடுப்பு மையங்கள் முதல்வர் உத்தரவின் பேரில் அமைய உள்ளன. கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் தன்னார்வ அமைப்புகள் மூலம் ஆக்ஸிஜன் களன்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கு ஆக்ஸிஜன் பிரச்சனை இல்லை.
கோவையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள், மற்றும் களப்பணியாளர்களை நேரில் சந்தித்து பேசினோம். மாநகராட்சி அதிகாரிகள் செயல்பாடுகள் குறித்து மக்களிடம் கேட்டறிந்தோம். கோவை அரசு மருத்துவமனையில் 0 டிலே என்ற நிலையில், ஆம்புலென்ஸில் வருவோரை உடனடியாக சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஆணைப்படி கூடுதல் மருத்துவர்கள், செவிலியர் நியமிக்கபட உள்ளனர். கோவை மாவட்டத்திற்கு போதுமான அளவிற்கு மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்கப்படுவார்கள்.'' என தெரிவித்தார்.