கோவையில் அடுத்து வரும் நான்கு நாட்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு... உரிய முன்னேற்பாடுகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்..!

கோவை: கோவையில் அடுத்து வரும் நான்குநாட்களுக்கு, கனமழை எதிர்பார்க்கப்படுவதால், உரிய முன்னேற்பாடுகளை மேற்கொள்ள, வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையத் தலைவர் ராமநாதன் அறிவுறுத்தியுள்ளார்.


கோவை: கோவையில் அடுத்து வரும் நான்குநாட்களுக்கு, கனமழை எதிர்பார்க்கப்படுவதால், உரிய முன்னேற்பாடுகளை மேற்கொள்ள, வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையத் தலைவர் ராமநாதன் அறிவுறுத்தியுள்ளார்.

கோவையில் அடுத்து வரும் நான்குநாட்களுக்கு, கனமழை எதிர்பார்க்கப்படுவதால், உரிய முன்னேற்பாடுகளை மேற்கொள்வது குறித்து, வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையத் தலைவர் ராமநாதன், ‘‘கோவையில், எதிர்வரும் நான்கு நாட்களுக்கு, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஆங்காங்கே இடி, மின்னலுடன் கூடிய கன மழை பொழிய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 27 முதல் 32 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை, 20 முதல் 23 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.

கோவையில் இன்று, 40 மி.மீ., நாளை 120 மி.மீ., 17-ஆம் தேதி 40 மி.மீ., 18-ஆம் தேதி 20 மி.மீ., மழை பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது. காலை நேரக்காற்றின் ஈரப்பதம், 95 சதவிகிதமாகவும், மாலை நேரக் காற்றின் ஈரப்பதம், 55 முதல் 85 சதவிகிதமாகவும் பதிவாக வாய்ப்புள்ளது. சராசரியாக காற்றின் வேகம், மணிக்கு, 15 முதல் 40 கி.மீ., வேகத்தில் பெரும்பாலும் தென்மேற்கு திசையில் வீசக்கூடும். மேற்குதொடர்ச்சி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமானது முதல், கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால், நீர்ப்பாசனத்தைத் தள்ளிப்போடவும், கோடை உழவும் செய்யலாம். குறுகிய கால நெல் சாகுபடிக்கு, நாற்றங்கால் தயார் செய்யலாம்; விதைப்பினை மழை முடியும் வரை தள்ளிப்போட வேண்டும். சாகுபடி செய்யப்பட்ட பயிர்களுக்கு, வடிகால் வசதி செய்ய வேண்டும். காற்றின் வேகம் அதிகமாக இருக்கக்கூடும் என்பதால், தக்க முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.'' என்று தெரிவித்துள்ளார்.

Newsletter

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...

PMBJP திட்டத்தின் கீழ் கோவைக்கு ரயிலில் வந்த 1,300 டன் மானிய உர மூட்டைகள்

பிரதம மந்திரி பாரதிய ஜன உர்வராக் பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 1,300 டன் மானிய யூரியா உ...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...