தூய்மைப் பணியாளர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்... தூய்மைப் பணியாளர்களுக்கான தேசிய ஆணையம் முதல்வருக்கு கோரிக்கை..!

கோவை: முன்களப் பணியாளர்களான துாய்மை பணியாளர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என, தூய்மைப் பணியாளர்களுக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன், முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.


கோவை: முன்களப் பணியாளர்களான துாய்மை பணியாளர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என, தூய்மைப் பணியாளர்களுக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன், முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

தூய்மைப் பணியாளர்களுக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன், முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கையில், ‘‘கொரோனா பெருந்தொற்று காலத்தில் தீவிரமாக பணியாற்றி வரும் மருத்துவப் பணியாளர்களுக்கு, அவர்களின் பொறுப்புக்கேற்ப ஊக்கத்தொகை வழங்கப்படும் என, முதல்வர் அறிவித்து உள்ளார். மருத்துவப் பணியாளர்களோடு இணைந்து, முன்களப் பணியாளர்களாக பணிபுரிந்து வரும் தூய்மைப் பணியாளர்களையும், தமிழக அரசு கவனத்தில் கொண்டிருக்க வேண்டும்.

அனைத்து பகுதிகளிலும் ஓராண்டுக்கும் மேலாக, கொரோனா தொற்று எதிர்ப்புப் போராட்டத்தில், தூய்மைப் பணியாளர்கள் உழைத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களில் பலர் இறந்துள்ளனர்; பலர் நோய்வாய்ப்பட்டு உள்ளனர். இந்தக் காலகட்டத்தில் கூட, மாத ஊதியம் கொடுக்கப்படாமல், பல மாவட்டங்களில் நிலுவை இருந்து வருகிறது. இதையெல்லாம் கவனத்தில் வைத்து, முன்களப் பணியாளர்களாகப் பணிபுரிந்து வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு, ஊக்கத்தொகையும், கொரோனா எதிர்ப்புப் போராட்டத்தில் இறந்தால், நஷ்ட ஈடாக 25 லட்சம் ரூபாயும் தர, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என்று தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...