கொட்டும் மழையில் பொள்ளாச்சியில் முதற்கட்ட கொரோனா நிவாரண தொகையைப் பெற்று சென்ற பொதுமக்கள்..!

பொள்ளாச்சி: கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பொள்ளாச்சியில் முதற்கட்ட கொரோனா நிவாரணத் தொகையான ரூ.2000/-த்தை பொதுமக்கள் பெற்றுச் சென்றனர்.


பொள்ளாச்சி: கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பொள்ளாச்சியில் முதற்கட்ட கொரோனா நிவாரணத் தொகையான ரூ.2000/-த்தை பொதுமக்கள் பெற்றுச் சென்றனர்.

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற உடன் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் முக்கியத் திட்டமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000/- வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.



முதல் தவணையாக ரூ.2000 வழங்கப்படும் என்று அறிவித்ததை அடுத்து, ஏற்கெனவே அதற்கான டோக்கன்கள் வழங்கப்பட்ட நிலையில், பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் இன்று காலை 8 மணி முதல் ரூ.2000/- வழங்கப்பட்டது.



கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சமூக இடைவெளியோடு, கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் வரிசையில் நின்று தொகையைப் பெற்றுச் சென்றனர். கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்து உள்ள தங்களுக்கு இந்த உதவித்தொகை என்பது பேருதவியாக இருக்கும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

PMBJP திட்டத்தின் கீழ் கோவைக்கு ரயிலில் வந்த 1,300 டன் மானிய உர மூட்டைகள்

பிரதம மந்திரி பாரதிய ஜன உர்வராக் பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 1,300 டன் மானிய யூரியா உ...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...