கோவை: உபயோகம் இன்றி பணிமனைகளில் நிறுத்தி வைத்துள்ள பேருந்துகளை கொரோனா வார்டுகளாக மாற்ற வேண்டும் என நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு அமைப்பு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் உபயோகம் இன்றி பணிமனைகளில் நிறுத்தி வைத்துள்ள பேருந்துகளை கொரோனா வார்டுகளாக மாற்ற வேண்டும் என்பது குறித்து நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் என்.ஆர். ரவிசங்கர், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில்,
‘‘கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ள அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். தற்போதைய நிலையில், கொரோனாவால் பாதிக்கப்படுவோர் சிகிச்சை பெறுவதற்கு மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை தொடர்ந்து நீடிக்கிறது. கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையின் போது, தென்னக ரயில்வே சார்பில், ரயில் பெட்டிகள் கொரோனா வார்டுகளாக மாற்றப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டன. தற்போது, மீண்டும் நோய்த் தொற்று அதிகரித்துள்ள நிலையில், தென்னக ரயில்வே சார்பில், ரயில் பெட்டிகளை கொரோனா வார்டுகளாக மாற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில், பழுதடைந்து இயக்கப்படாத நிலையில், ஏராளமான பேருந்துகள், பணிமனைகளில் பயனின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கொரோனா சிகிச்சைக்கு படுக்கைகள் பற்றாக்குறை நிலவும் இச்சூழலில், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்தப் பேருந்துகளை கொரோனா வார்டுகளாக மாற்ற வேண்டும். அதன் பிறகு, வார்டுகளாக மாற்றப்பட்ட பேருந்துகளை அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி வளாகங்களில் நிறுத்த வேண்டும். படுக்கைகள் கிடைக்கப் பெறாமல் ஆம்புலன்ஸில் காத்திருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு, பேருந்துகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள வார்டுகளில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.