நெருக்கடியில் தவிக்கும் எம்.எஸ்.எம்.இ.,களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் - தமிழக அரசுக்கு 'கொடிசியா' வேண்டுகோள்!

கோவை: நெருக்கடியில் தவிக்கும் எம்.எஸ்.எம்.இ.,களுக்கு ஊரடங்கு காலத்தில், நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு 'கொடிசியா' வேண்டுகோள் விடுத்துள்ளது.


கோவை: நெருக்கடியில் தவிக்கும் எம்.எஸ்.எம்.இ.,களுக்கு ஊரடங்கு காலத்தில், நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு 'கொடிசியா' வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்(கொடிசியா) தலைவர் ரமேஷ்பாபு கூறியுள்ளதாவது:

கொரோனா இரண்டாவது அலையால், தொழில் நிறுவனங்கள் பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. வருமானம் இழப்பால் வங்கிக்கடன், வரி, மின் கட்டணம் செலுத்த முடியாமல் குறு, சிறு நிறுவனங்கள் திணறி வருகின்றன.

இச்சூழலில், எம்.எஸ்.எம்.இ.,கள் மீள தேவைப்படும், கோரிக்கைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தகுதியுள்ள அனைவருக்கும் சிறப்பு முகாம்கள் மூலம், 'கோவிட் 19' தடுப்பூசி போடுவதற்கு, நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலை இழந்து நெருக்கடியில் தவிக்கும், எம்.எஸ்.எம்.இ.,களுக்கு ஊரடங்கு சமயத்தில் நிவாரண நிதி வழங்க வேண்டும். அவசரகால கடன் உதவி திட்டத்தின் கீழ், தொழிற்சாலைகளுக்கு அவற்றின் நடப்பு மூலதன கடன் அல்லது ரொக்கக் கடன் வசதி ஆகியவற்றில் கூடுதலாக, 20 சதவீதம் கடன் உதவியை எந்த நிபந்தனையும் இல்லாமல் வங்கிகளும், வங்கிசாரா நிதி நிறுவனங்களும் வழங்க வேண்டும்.

அதேபோல, தற்போது ஏற்பட்டுள்ள, பொருளாதார நெருக்கடியில் இருந்து, விடுபடும் விதமாக, இரண்டு வருட கால கடன் விடுப்பு காலத்திற்கு பிறகு, இந்த கூடுதல் கடன் தொகையை திருப்பி செலுத்தும் காலத்தை, ஆறு ஆண்டுகளாக நிர்ணயிக்க வேண்டும்.அனைத்து கடன்களுக்கும், அடுத்த ஓராண்டுக்கு வட்டி தள்ளுபடி செய்ய வேண்டும். மின் கட்டணம், வருமான வரி, ஜி.எஸ்.டி., உள்ளிட்டவற்றில் இருந்து விலக்கு அளித்தால் உதவியாக இருக்கும். எரிபொருள் மற்றும் பெட்ரோலிய பொருட்களை, ஜி.எஸ்.டி., வரம்புக்குள் கொண்டுவர வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

PMBJP திட்டத்தின் கீழ் கோவைக்கு ரயிலில் வந்த 1,300 டன் மானிய உர மூட்டைகள்

பிரதம மந்திரி பாரதிய ஜன உர்வராக் பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 1,300 டன் மானிய யூரியா உ...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...