கோவை அரசு மருத்துவமனையில், நிரம்பி வழியும் மக்கள் கூட்டத்தை சமாளிக்க புதிதாக 20 செக்யூரிட்டிகள் நியமனம்!

கோவை: கோவை அரசு மருத்துவமனையில், நிரம்பி வழியும் மக்கள் கூட்டத்தை சமாளிக்க புதிதாக 20 செக்யூரிட்டிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


கோவை: கோவை அரசு மருத்துவமனையில், நிரம்பி வழியும் மக்கள் கூட்டத்தை சமாளிக்க புதிதாக 20 செக்யூரிட்டிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோவை அரசு மருத்துவமனையில், தினமும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள் மற்றும் வெளி நோயாளிகள், சிகிச்சை பெற்று வருகின்றனர். தவிர, கொரோனா பாதிப்புடன் சுமார், 1000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஏற்கனவே, குறைவான மருத்துவர்கள் மற்றும் நர்ஸ்கள் இருப்பதால், சிகிச்சை அளிப்பதில் பெரும் சிக்கல் நிலவி வருகிறது. மருத்துவமனை வளாகத்தில் தினமும், நோயாளிகள் மற்றும் உறவினர்களின் கூட்டம் நிரம்பி வழிவதால், கூட்டத்தை சமாளிக்க முடியாமல், செக்யூரிட்டிகள் திணறி வந்தனர்.

இந்நிலையில், கோவை பில்டர்ஸ் கான்ட்ராக்ட் அசோசியேஷன் (சிபாகா) சார்பில் மருத்துவமனைக்கு, 20 செக்யூரிட்டிகளை வழங்கியுள்ளனர்.

இது குறித்து மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில், ''மருத்துவமனையில் ஆட்கள் பற்றாக்குறை இருந்து வரும் நிலையில், இது போன்ற உதவி, ஊக்கம் அளிக்க கூடியதாக உள்ளது. தற்போது, பணியமர்த்தப்பட்டுள்ள செக்யூரிட்டிகள், மருத்துவமனையில் கூடும் கூட்டத்தை கட்டுப்படுத்துவது, ஆம்புலன்ஸ்களுக்கு வழி ஏற்படுத்தி கொடுப்பது, பொதுமக்களை கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவர்,'' என்று தெரிவித்தார்.

Newsletter

PMBJP திட்டத்தின் கீழ் கோவைக்கு ரயிலில் வந்த 1,300 டன் மானிய உர மூட்டைகள்

பிரதம மந்திரி பாரதிய ஜன உர்வராக் பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 1,300 டன் மானிய யூரியா உ...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...