கோவை மாவட்ட கட்டுமான, அமைப்பு சாரா அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தொழிலாளர் நலத்துறை அமைச்சரிடம் மனு!

கோவை: கோவை மாவட்ட கட்டுமான, அமைப்பு சாரா அனைத்து தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், தமிழக தொழிலாளர் நலத்துறை மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ கணேசன் அவர்கள் இல்லத்தில் கூட்டமைப்பின் சார்பில், ஒருங்கிணைப்பாளர் G. முருகேசன், HMS சங்கத்தின் பொதுச்செயலாளர் G.மனோகரன், INTUC சங்கத்தலைவர் D. சிரஞ்சீவி கண்ணன் உள்ளிட்டோர் கோரிக்கை மனு அளித்தனர்.



கோவை: கோவை மாவட்ட கட்டுமான, அமைப்பு சாரா அனைத்து தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், தமிழக தொழிலாளர் நலத்துறை மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ கணேசன் அவர்கள் இல்லத்தில் கூட்டமைப்பின் சார்பில், ஒருங்கிணைப்பாளர் G. முருகேசன், HMS சங்கத்தின் பொதுச்செயலாளர் G.மனோகரன், INTUC சங்கத்தலைவர் D. சிரஞ்சீவி கண்ணன் உள்ளிட்டோர் கோரிக்கை மனு அளித்தனர். 

தமிழக முதலமைச்சர் பெயரிட்டு எழுதப்பட்டுள்ள அந்த மனுவில், 

தமிழ்நாட்டில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழில்களில் 2 கோடி தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். நடைமுறையில் 17 தொழிலாளர் நல வாரியங்களில் 70 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்து, அவர்களில் 23.37 லட்சம் பேர் மட்டும் பதிவை புதுப்பித்து உள்ளனர். 

பதிவு செய்யாதவர்கள் 1.30 கோடி, பதிவை தவறவிட்டவர்கள் 43 லட்சம் பேரும் உள்ளனர். அனைத்து தொழிலாளர்களும் நலவாரியங்களில் பதிவு செய்ய வேண்டும் என்ற மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் நோக்கம் கடந்த 10 ஆண்டுகளாக நிறைவேற்றப்படவில்லை. 

எனவே, கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழில்களில் பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களும் கட்டாயமாக தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்தாக வேண்டும் என அறிவித்து கால அவகாசம் கொடுத்து பதிவை கட்டாயமாக்க வேண்டும். 

தமிழ்நாட்டில் செயல்பாட்டில் உள்ள 17 தொழிலாளர் நலவாரியங்களில் சுமார் 70 லட்சம் தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர் இவர்களில் 27.7 லட்சம் தொழிலாளர்கள் புதுப்பித்து உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதர தொழிலாளர்களை புதுப்பிக்க கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

இந்நிலையில், நோய்த்தொற்று ஊரடங்கு காரணமாக புதுப்பிக்க வேண்டியவர்களின் பதிவு டிசம்பர் 31 வரை செல்லுபடியாகும் என அரசாணை வெளியிட்டு அறிவித்தது. இந்த நிலையில் 2020 ஜூன் 10 முதல் பதிவு புதுப்பித்தல் இணையவழியில் நடைமுறைக்கு வந்துள்ளது. இணையவழியில் பதிவு புதுப்பித்தவர்களில் பெரும்பான்மையினருக்கு புதுப்பித்தல் சான்று கிடைக்கவில்லை.

இணையவழியில் ஆதாரில் தொலைபேசி எண் இணைக்க வேண்டும் என்பது கட்டாயம் என்பதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் புதுப்பிக்க விண்ணப்பிக்கவில்லை. இதனால் இயற்கை மற்றும் கொரோனா நோய் தொற்றால் மரணமடைந்த குடும்பத்தினர் உட்பட எந்த பண பயன்களும் தொழிலாளர்களால் பெற முடியவில்லை. 

எனவே, 17 நலவாரியங்களில் பதிவு செய்து கொண்ட 70 லட்சம் தொழிலாளர்களின் பதிவையும் 2020 ஜனவரி 1 முதல் 2022 மார்ச் 31 வரை செல்லுபடியாகும் என சிறப்பு அரசாணை வெளியிட்டு தொழிலாளர்கள் வாரிய பலன்களை பெற்று அனுபவிக்க உதவி செய்ய வேண்டும். 

நலவாரியத்தில் பதிவு செய்து தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் உறுப்பினராக இருந்து 60 வயது நிறைவடைந்த தொழிலாளர்கள் ஓய்வூதியம் பெற தகுதி உடையவர்கள் என்று 1994இல் கட்டுமான தொழிலாளர் நலத் திட்டத்தில் விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிபந்தனை காரணமாக பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஓய்வூதியம் பெற முடியவில்லை. அதனால் இந்த நிபந்தனையை ரத்து செய்து அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என அனைத்து தொழிற்சங்கங்கள் கோரின. அதை ஏற்று 2011 பிப்ரவரி 28 அன்று பதிவு பெற்று 60 வயது நிறைவடைந்த அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் அரசாணை 36 வெளியிட்டார்கள். அந்த அரசாணை கடந்த பத்தாண்டுகளாக நடைமுறைப்படுத்தவில்லை. 

எனவே, ஓய்வூதியம் மறுக்கப்பட்ட அனைவருக்கும் 2011 பிப்ரவரி 28 அரசாணைப்படி ஓய்வூதியம் வழங்க வேண்டும். இணையவழியில் ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்த தொழிலாளர்களுக்கு 30 நாட்களுக்குள் ஓய்வூதியம் வழங்க ஆணை வழங்க வேண்டும். 60 வயது நிறைவடைந்த நாளில் இருந்து ஓய்வு ஊதியம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

நோய்தொற்று காலத்தை முன்னிட்டு தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு புதுப்பித்தல் மற்றும் கேட்பு மனு சமர்ப்பித்தல் பணிகள் 2020 ஜூன் 10 முதல் இணைய வழியில் நடைபெறுகிறது. இதற்கு ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டையில் போன் நம்பர் இணைக்கப்படாததால் மேற்படி பணிகள் செய்ய முடியவில்லை. எனவே ஆதார் தொலைபேசி எண் வெரிபிகேஷனுக்கு பதிலாக கைரேகை முறையான பயோமெட்ரிக் முறை எளிமையாக இருக்கும் என்பதால் அந்த முறையை அமல்படுத்த வேண்டும். 

இணையவழியில் பதிவு புதுப்பித்தல், அப்டேஷன் மனுக்கள் பற்றிய தகவல்கள் தொழிலாளியின் மொபைல் போனுக்கு செல்கிறது. அதைப் பார்த்து அறிந்து கொள்ளும் போதிய படிப்பறிவே தொழிலாளர்களும் இல்லை. ஆனால் 60 நாட்கள் கெடுவில் வாரியம் விண்ணப்பத்தை தள்ளுபடி செய்கிறது. 

படிப்பறிவு போதாத கட்டுமான அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் இதுபோன்ற காலக்கெடு விதிப்பது நியாயமற்றது. எனவே இணையவழி விண்ணப்பங்களை தள்ளுபடி செய்ததை ரத்து செய்ய வேண்டுமென்றும், இணையவழி பணிகளுக்கு அனைத்து வங்கிகள் மற்றும் தபால் நிலைய வங்கிகளின் கணக்கு ஆகியவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். 

இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

PMBJP திட்டத்தின் கீழ் கோவைக்கு ரயிலில் வந்த 1,300 டன் மானிய உர மூட்டைகள்

பிரதம மந்திரி பாரதிய ஜன உர்வராக் பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 1,300 டன் மானிய யூரியா உ...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...