தமிழக அரசு அறிவித்த உதவித்தொகை முதல் கட்டமாக வால்பாறை நியாயவிலை கடைகளில் திமுக நிர்வாகிகள் வழங்கினர்..!

கோவை: கோவை வால்பாறையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு அறிவித்த உதவித்தொகை முதல் கட்டமாக வால்பாறை நியாயவிலை கடைகளில் திமுக நிர்வாகிகள் வழங்கினர்.


கோவை: கோவை வால்பாறையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு அறிவித்த உதவித்தொகை முதல் கட்டமாக வால்பாறை நியாயவிலை கடைகளில் திமுக நிர்வாகிகள் வழங்கினர்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில், கொரோனா பெருந்தொற்று நிவாரணமாக ரூ.4000 வழங்குவதென்றும், முதல் தவணையாக ரூ.2000 வழங்குவதாகவும் அறிவித்ததில் முதல் தவணை வால்பாறை நகரத்தில் பொறுப்பாளர் த.பால்பாண்டி தலைமையில், முன்னாௐள் நகராட்சித் தலைவர் கோழி கடை கணேஷ் முன்னிலையில் வால்பாறை பகுதியில் இன்று தொடங்கி வைத்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் சுமார் 48 நியாயவிலைக் கடைகள் உள்ளது. வால்பாறையில் 17663 அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு முதல் கட்டமாக இன்று நியாயவிலைக் கடைகளில் வழங்கப்பட்ட டோக்கன் மூலம் ரூ.2000 வழங்கப்பட்டது. வால்பாறை 8வது வார்டு 10வது வார்டு மற்றும் 9 வது வார்டு நியாயவிலை கடைகளில் திமுக நகர பொறுப்பாளர் பால்பாண்டி தலைமையில் வழங்கப்பட்டது. மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளரான பாஸ்கர், நகர பொருளாளரான செல்வம், நகர துணை செயலாளரான செந்தில், வடை கடை குட்டி, மணிகண்டன், ஜெயராமன், வெங்கடேஷ் பொன்னுசாமி போன்ற திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...