கோவை தெற்கு தொகுதிக்கு மறுவாக்கு எண்ணிக்கை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு..!

கோவை: நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார். அந்த தேர்தல் முடிவுக்கு எதிராக, மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


கோவை: நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார். அந்த தேர்தல் முடிவுக்கு எதிராக, மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கோவை தொகுதியில் இந்துஸ்தான் ஜனதா கட்சியின் வேட்பாளரும் தென்மண்டல தலைவருமான கே.ராகுல் காந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழக சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு 53 ஆயிரத்து 209 வாக்குகள் பெற்ற வானதி சீனிவாசன் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார். எனக்கு 73 வாக்குகள் மட்டுமே பதிவானதாக அறிவிக்கப்பட்டது. தேர்தலுக்கு முன்பாக வானதி சீனிவாசனுக்கு எதிராக எதிர்ப்பலை நிலவிய சூழலில் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது சந்தேகத்தை எழுப்புகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்து அதன் மூலம்தான் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றுள்ளார்.

அதனால், கோவை தெற்கு தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என மே 3-ஆம் தேதியே தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, எனது மனுவை பரிசீலித்து கோவை தெற்கு தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வர உள்ளது.

Newsletter

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...