நீலகிரி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் தகவல்!

நீலகிரி: ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க நீலகிரி, பெரம்பலூர், விருதுநகர் மாவட்டங்களில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதாக வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.


நீலகிரி: ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க நீலகிரி, பெரம்பலூர், விருதுநகர் மாவட்டங்களில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதாக வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.



நீலகிரி மாவட்டம் உதகையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குன்னூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக வனத்துறை அமைச்சருமான கா.ராமசந்திரன் கலந்து கொண்டு நீலகிரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா கட்டுப்பாட்டு பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.



அப்போது டிவிஎஸ் அறக்கட்டளை சார்பாக நீலகிரி மாவட்ட சுகாதார துறைக்கு 25 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் செரிவூட்டிகள் அமைச்சரிடம் ஒப்படைக்கபட்டது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் கூறியதாவது;

“நீலகிரி மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் இருப்பு அதிகமாக உள்ளது. சிகிச்சை மையங்களில் கூடுதல் படுக்கைகள் இருக்கின்றன. நீலகிரி மாவட்டத்தில் 4 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட பட்டுள்ளது. இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. தமிழகத்தில் யானைகள் தாக்கி மனிதர்கள் இறப்பதை தடுக்கவும், குடியிருப்பு பகுதிக்குள் வரும் காட்டு யானைகளை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டவும் வனத்துறையில் புதிதாக தனி பிரிவு உருவாக்கப்பட உள்ளது. அந்த குழுவினர் குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் வருவதை தடுத்து வன பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட நடவடிக்கை எடுப்பார்கள்.” இவ்வாறு வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் தெரிவித்தார்.

Newsletter

PMBJP திட்டத்தின் கீழ் கோவைக்கு ரயிலில் வந்த 1,300 டன் மானிய உர மூட்டைகள்

பிரதம மந்திரி பாரதிய ஜன உர்வராக் பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 1,300 டன் மானிய யூரியா உ...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...