கோவை: கோவையில் வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன், உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள கோயம்புத்தூர் தொழில்துறை கட்டமைப்பு சங்க கூட்டரங்கில், நடந்த இந்த ஆலோசனையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு அலுவலர்கள் மற்றும் தொழில் துறையினரின் கருத்துகளை அமைச்சர்கள் கேட்டறிந்தனர்.
இதில் கோவையில் கொரோனாவை கட்டுப்படுத்த மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்களுக்கு சுகாதாரத்துறை உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் விளக்கமாக எடுத்துக் கூறினர். மேலும் தாங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து தொழில் துறையினர் அமைச்சர்களிடம் விளக்கினர்.

மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, உள்ளிட்ட கோவை மாவட்டத்தில் உள்ள 8 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
ஆலோசனை கூட்டத்தில் பேசிய வனத்துறை அமைச்சர் ராமசந்திரன், “கோவை மாவட்டத்தில் கொரோனா தொடர்பாக உள்ள பிரச்சனைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்ற பாகுபாடின்றி சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்,” என்றார். ஆலோசனையின் போது பேசிய அமைச்சர் சக்கரபாணி, “கொரோனா முதல் அலையை விட இரண்டாம் அலையின் தாக்கம் அதிகமாக உள்ளது.
கோவை மாவட்டத்திற்கு கோவை மட்டுமல்லாமல் பிற மாவட்டங்கள் மற்றும் பாலக்காட்டில் இருந்தும் சிகிச்சைக்காக மக்கள் வருகின்றனர். எனவே அனைவருக்கும் தேவையான மருத்துவ வசதிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இரண்டாம் அலை மிக கொடூரமாக உள்ளது. இதனால் தான் தமிழக முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக செய்து வருகிறார். முழு ஊரடங்கால் தொழில் துறையினர் பாதிப்படைவார்கள் என தெரிவித்தால், அவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

தமிழகத்தில் வரும் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் பேசி, தமிழக அரசு கூடுதல் ஆக்சிஜனை பெற்று தந்துள்ளோம். ஸ்டெர்லைட் ஆலை மூலம் பெறப்படும் ஆக்சிஜன் விரைவில் கோவை மாவட்டத்திற்கு வர உள்ளது. கோவையில் ஆக்சிஜன் பிரச்சனை உள்ளது. அதற்கு தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது வரை மத்திய அரசு மேலும் 280 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்கி வந்தது, தமிழக முதல்வரின் நடவடிக்கையால்419 மெட்ரிக் டன் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவில் இருந்து மக்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரெம்டிசிவர் மருந்துகளை வாங்க கூட்டம் கூடுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா நிவாரண நிதி முழுமையாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மட்டும் பயன்படுத்தப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார், எனவே கோவையில் உள்ள தொழில் நிறுவன உரிமையாளர்கள், நிவாரண நிதி வழங்க முன்வர வேண்டும்.

சிறு, குறு நடுத்தர தொழில் முனைவோருக்கான முதலீட்டு மானியம் ரூ.125 கோடி உடனடியாக வழங்கப்பட உள்ளது. சிட்கோ தொழில் நிறுவனங்கள் வாடகை செலுத்த 6 மாத காலவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்கு கடன் தொகை திரும்பி செலுத்தும் மாத தவணை கால நீட்டிப்பு வழங்க வங்கிக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது,” என கூறினார்.
ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “ கோவை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்துவதை அதிகப்படுத்த நடவடிக்கை தேவை. நாங்கள் அதிகாரிகளுக்கும், அரசுக்கும் நாங்கள் 100 சதவிகிதம் முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளோம். தனியார் மருத்துவமனைக்கும் தட்டுப்பாடு இல்லாமல் ஆக்சிஜன் வழங்க வேண்டும். கேரளாவில் இருந்து ஆக்சிஜன் மூலக்கூறு களை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும். ரெம்டிசிவர் மருந்துகள் கூடுதலாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.