விமான டிக்கெட்டுகள் விற்பனையில் 30 லட்சம் மோசடி.. கோவை தனியார் நிறுவன ஊழியர் கைது..!

கோவை: கோவையில் 30 லட்சம் மோசடி செய்த தனியார் ஊழியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விமான டிக்கெட்டுகள் விற்பனை மூலம் கிடைத்த ரூபாய் 29.98 லட்சத்தை மோசடி செய்த தனியார் நிறுவன ஊழியரை போலீஸார் சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவையில் 30 லட்சம் மோசடி செய்த தனியார் ஊழியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விமான டிக்கெட்டுகள் விற்பனை மூலம் கிடைத்த ரூபாய் 29.98 லட்சத்தை மோசடி செய்த தனியார் நிறுவன ஊழியரை போலீஸார் சிறையில் அடைத்தனர்.

விமான டிக்கெட்டுகளை வாங்கி விற்பனை செய்யும் நிறுவனத்தின் கிளை கோவை அருகே உள்ள சூலூர் காங்கேயம்பாளையத்தில் செயல்பட்டு வருகிறது. இக்கிளையில் இளநிலை அலுவலர் ராஜு(32) என்பவர் பணிபுரிந்து வந்தார். 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2020 ஜூலை வரையிலான காலத்தில் ராஜு வாடிக்கையாளர்களுக்கு 29.98 லட்சம் ரூபாய் மதிப்பிலான விமான டிக்கெட்டுகளை விற்பனை செய்தார். ஆனால், பணத்தை நிறுவனத்தின் கணக்கில் செலுத்தாமல் மோசடி செய்தார். நிறுவனத்தின் முதன்மை மேலாளர் சங்கர் கோவை மாவட்ட குற்றப்பிரிவில் இதுகுறித்து புகார் செய்தார். விசாரணையில் ராஜு மோசடி செய்தது உறுதியானது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...

PMBJP திட்டத்தின் கீழ் கோவைக்கு ரயிலில் வந்த 1,300 டன் மானிய உர மூட்டைகள்

பிரதம மந்திரி பாரதிய ஜன உர்வராக் பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 1,300 டன் மானிய யூரியா உ...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...