கோவை: கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. அரசின் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக ரயில்வே ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தென்னக ரயில்வே மேலாளர் மற்றும் டிவிசன் மேலாளருக்கு கடிதம் மூலமாக வலியுறுத்தியுள்ளார்.
கோவை: கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. அரசின் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக ரயில்வே ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தென்னக ரயில்வே மேலாளர் மற்றும் டிவிசன் மேலாளருக்கு கடிதம் மூலமாக வலியுறுத்தியுள்ளார்.
கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தனது கடிதத்தில் கூறியிருப்பதாவது, ‘‘நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசி ஆகியவற்றின் பற்றாக்குறை முழுமையாகத் தீர்க்கப்படவில்லை. இதன்காரணமாக மரணமடைகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில், கொரோனா தொற்று சங்கிலியை உடைக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு மே 10ஆம்தேதி முதல் 24ஆம்தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கபட்டுள்ளது.
ஊரடங்கினால் ரயில்வே சேவைகள், பொதுப் போக்குவரத்து, மற்றும் மெட்ரோ உள்ளிட்ட பயண சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறையும், 50% பணியாளர்கள் பணிக்கு வந்தால் போதும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தென்னக ரயில்வேயில் அரசு அலுவலகங்களில் ஷெட், ஷாப் களிலும் 50% சதவிகித தொழிலாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். இத்தகைய பணியாற்றும் ரயில்வே தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதை உறுதி செய்திட வேண்டுகிறேன். மேலும், ரயில்வே மருத்துவமனைகளில் தேவையான ஆக்ஸிஜன் மருந்துகள் எப்போது தயார் நிலையில் வைத்திருக்க வேண்டுகிறேன்.
ரயில்வேதுறையில் உள்ள இஞ்ஜினீயரிங், டிராஃபிக், எலக்ட்ரிக்கல் ஏசி /டிஎல், சிக்னல், கேரேஜ் வேகன் மெக்கானிக்கல், டிஆர்டி, ஓட்டுநர் கார்டு போன்ற ஊழியர்கள் ஓடும் பாதையில் ஓப்பன் லைனில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் சங்கிலி தொடர் போல பிரியாமல் கூட்டமாக பணி செய்து வருகிறார்கள். சென்ற கொரோனா காலங்களில் இஞ்ஜினீயரிங் பகுதியில் உள்ள ஊழியர்கள் இடைவெளி இல்லாமல் கூட்டமாக, பாதுகாப்பு சாதனங்கள் இல்லாமல் கடினமான வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டனர் என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். இச்சூழலில் தற்போது தீவிரமாக கொரோனா இரண்டாவது அலையில் ஓப்பன் லைன் ஊழியர்களுக்கு இதுவரை கொரோனா தடுப்பு பாதுகாப்பு சாதனங்கள் தேவைக்கேற்ப வழங்கப்படவில்லை என்பது எனது கவனத்திற்கு வந்துள்ளது. மேலும், சுழற்சி முறையில் பணி செய்வது உட்பட எந்தத் திட்டங்களும் இதுவரை நடை பெறவில்லை என்பது தெரியவருகிறது. சென்ற கொரானாவின் போது 700-க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் மரணமடைந்துள்ளனர். இப்போதும் இத்தகைய சூழல் நிலவுவது கவலையை ஏற்படுத்துகிறது. உடனடியாக தென்னக ரயில்வே மேலாளர் அவர்கள் ஓப்பன் லைன் ஊழியர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
ஊரடங்கினால் பஸ் பொது போக்குவரத்துகள் முற்றாக முடங்கிப் போனதால் வெளியிலிருந்து வருபவர்கள் உட்பட 50% ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணி வழங்க வேண்டும். சமூக இடைவெளியுடன், கூட்டமாக சேராமல் பணிகள் வழங்க வேண்டும். கொரோனா பாதுகாப்பு சாதனங்கள், கவச உடைகள், வெப்ப பரிசோதனைகள் நடைபெற வேண்டும். கொரோனா தொற்றுள்ளவருக்கு சிறப்பு விடுப்பு, ஓய்வு வழங்க வேண்டும். பேருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்து வசதிகள் இல்லாததினால் மீண்டும் ஒர்க்மேன் ஸ்பெஷல் வண்டிகள் அனைத்து டிவிசன்களிலும் இயக்கப்பட வேண்டும். ரயில்வேயில் கொரோனா பாதுகாப்பு உத்தரவுகள் அமலாவதைக் கண்காணிக்க வேண்டும். உதாரணமாக, ஈரோடு டீசல் ஷெட்டில் கொரோனா பாதுகாப்பு விதிகளின் உத்தரவு மாற்றுத்திறனாளிகளுக்கு அமலாக்கப்படுவதில்லை என்ற புகார் எனது கவனத்திற்கு வந்துள்ளது. ஆகையால், ரயில்வே தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ரயில்வே ஓப்பன் லைன் ஊழியர்களுக்கு கொரோனா பாதுகாப்புகளை உடனடியாக வழங்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்'' என்று பி.ஆர்.நடராஜன் எம்பி தெரிவித்துள்ளார்.