கோவையில் 2 கோயில்களில் கொள்ளை முயற்சி!

கோவை: கோவையில் 2 கோயில்களில் கொள்ளை முயற்சியின் போது அலாரம் ஒலித்ததால் கொள்ளையர்கள் தப்பிவிட்டனர்.


கோவை: கோவையில் 2 கோயில்களில் கொள்ளை முயற்சியின் போது அலாரம் ஒலித்ததால் கொள்ளையர்கள் தப்பிவிட்டனர்.

கருமத்தம்பட்டி அடுத்த சோமனூர் அருகே உள்ள காமாட்சி பாளையம் கிராமத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மாகாளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் நேற்று அதிகாலை 3 பேர் கொண்ட கும்பல் திருடுவதற்காக கோயில் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தது.

பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்களின் ஒருவன் மட்டும் கோயில் வாசலில் நின்றார். மற்ற இரண்டு திருடர்கள் கோயிலுக்குள் சென்று பொருட்களை திருட முயன்றனர். அப்போது கோயில் அலாரம் ஒலித்ததால், 3 பேரும் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இது அந்த கோயில் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது.

இதேபோன்று கருமத்தம்பட்டி அன்னூர் சாலையில் அமைந்துள்ள பிளாக் மாரியம்மன் கோவிலில் நேற்று காலை 4.30 அளவில் 2 மர்ம நபர்கள் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி ஈடுபட்டனர். ஆள் நடமாட்டம் அதிகரித்ததை தொடர்ந்து அங்கிருந்த கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர். கொள்ளை முயற்சி குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர்கள் இந்த கொள்ளை முயற்சிகளில் ஈடுபட்டார்களா என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...