உடுமலை: உடுமலை அருகே இரு பெண்கள் கொலை செய்யப்பட்டு, அமராவதி பிரதானக் கால்வாயில் வீசிய சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை காரத்தொழுவு பகுதியில் உள்ள அமராவதி பிரதான கால்வாயில், இரு பெண்களின் சடலங்கள் கடந்த, ஏப்ரல் 28ஆம் தேதி மீட்கப்பட்டது.
உடலில் இருந்த காயங்கள் மற்றும் ஒரு பெண் நிர்வாணமாக காணப்பட்டதால், கொலை செய்து கால்வாயில் வீசியிருக்கலாம் என்ற கோணத்தில், கணியூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையில், இறந்த பெண்கள் இருவரும் உடுமலை இந்திராநகர் நாகராஜ் மனைவி கோகிலாமணி (45), மற்றும் கொழுமம் ரோடு எஸ்.வி. புரம் முத்தையா மனைவி கீர்த்தி (35), எனவும் தெரிய வந்தது.
காவல்துறையினர் நடத்திய தொடர் விசாரணையில், இரு பெண்களையும் கொலை செய்து வாய்க்காலில் வீசிச் சென்ற வழக்கில் தொடர்புடைய குறிச்சிக்கோட்டையைச் சேர்ந்த குழந்தைசாமி, மற்றும் கள்ளிமந்தையம் குமார் இருவரை கைது செய்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் பெண்களுடன் உல்லாசமாக இருந்துவிட்டு, பின்பு அவர்கள் இருவரையும் கொலை செய்து சரக்கு வாகனத்தில் கொண்டு வந்து வாய்க்காலில் வீசிச்சென்றது தெரியவந்தது. இதனையடுத்து கொலைக்கு தொடர்புடைய இருவரையும், மடத்துக்குளம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.