சென்னை: கொரோனா பெருந்தொற்றால் தமிழகம் தவித்திருக்கும் நிலையில் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

இது குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து, திமுகவினர் ஆவலுடன் காத்திருப்பதை நான் அறிவேன்.
திமுக பெருவாரியான இடங்களில் வெற்றி பெறும் என்ற உற்சாகமான தகவல்கள் கருத்துக் கணிப்புகள் வழியாகவும் வந்து கொண்டிருக்கின்றன.
தமிழகமோ பெருந்தொற்றில் தள்ளாடுகிறது. சிகிச்சைக்கு படுக்கைகள், உயிர்வாயு கிடைக்காமல் நோயாளிகள் அவதிப்படுவதைப் பார்த்துப் பதைபதைக்கிறேன்.
இச்சூழலில் வாக்கு எண்ணும் இடங்களில் குவிந்தும், முடிவுகள் வர வர ஒன்று கூடியும் பெருந்தொற்றுக்கு ஆளாகிவிட வேண்டாம்.
இல்லங்களிலேயே முடிவுகளைத் தெரிந்து, வெற்றியைக் கொண்டாடுவதுதான் பொருத்தமான போக்கு. திமுக வெற்றியைக் கொண்டாடுவதைவிடவும் உடன்பிறப்புகளின் உயிரைப் பாதுகாப்பதே என் தலையாய நோக்கம்.
மாற்றுக்கட்சியினருக்கும் இது என் அன்பு வேண்டுகோள்.
வீதிகள் வெறிச்சோடட்டும்; உள்ளங்கள் மகிழ்ச்சியால் பொங்கட்டும்,” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.