அலட்சியமாக நடைபெறும் பெரியநாயக்கண்பாளையம் மேம்பாலப் பணிகள்... நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை..!

கோவை: கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் பெரியநாயக்கன்பாளையத்தில் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா முதல் சாமிசெட்டிபாளையம் பிரிவு வரை நடைபெற்று வரும் மேம்பாலம் கட்டுமானப் பணிகளில் அலட்சியப் போக்கு உள்ளது. இதில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


கோவை: கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் பெரியநாயக்கன்பாளையத்தில் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா முதல் சாமிசெட்டிபாளையம் பிரிவு வரை நடைபெற்று வரும் மேம்பாலம் கட்டுமானப் பணிகளில் அலட்சியப் போக்கு உள்ளது. இதில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் பெரியநாயக்கன்பாளையத்தில் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா முதல் சாமிசெட்டிபாளையம் பிரிவு வரை 1. 4 கிலோ மீட்டர் நீளத்துக்கு, சுமார் ரூ.85 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டுமானப் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக பெரியநாயக்கன்பாளையம் அருகே எல்.எம்.டபிள்யூ பிரிவிலிருந்து, சாமிசெட்டிபாளையம் பிரிவு வரை சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புகள், புளிய மரங்கள் அகற்றப்பட்டு தற்போது, மேம்பாலம் கட்டுமான ணி வேகமாக நடந்து வருகிறது. எல்.எம்.டபிள்யூ பிரிவு பெரியநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாண்ட், சாமிசெட்டிபாளையம் பிரிவு ஆகிய பகுதிகளில் தூண்கள் அமைக்க, ராட்சஷ குழிகள் தோண்டப்பட்டு உள்ளன. இதில், எல்.எம்.டபிள்யூ பிரிவு பகுதியில் இருந்து சாமிசெட்டிபாளையம் வரை தூண்கள் அமைக்கும் பணி, வேகமாக நடந்து வருகிறது.



இதனிடையே ராட்சஷ குழிகள் தோண்டப்பட்ட இடங்களில் முறையாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாமல் மிகவும் அலட்சியமாக உள்ளனர். ராட்சஷ குழிகளை ஒட்டியவாறுதான் வாகனங்கள் அனைத்தும் செல்கின்றன. ஆனால், பல ராட்சஷ குழிகள் அருகில் தடுப்புகள் போதுமான அளவு அமைக்கப்படவில்லை. அதே போல் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சர்வீஸ் சாலை அமைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. ஆனால், ஜல்லி கற்கள் கொட்டியதுடன் அப்பணி மந்தமடைந்துள்ளன. இதனால், ராட்சஷ குழிகள் அருகில் ஜல்லி கற்கள் சாலையில் புழுதி பறக்க வாகனங்கள் செல்கின்றன. இரவு நேரங்கள் மற்றும் மழைக் காலங்களில் இதனால் ராட்சஷ குழிகளில் வாகனங்கள் விழுந்து விபத்துக்குள்ளாகி உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘மேம்பாலப் பணிக்காக ராட்சஷ குழிகள் தோண்டப்பட்டன. ஆனால், தடுப்புகள் முறையாக அமைக்கப்படவில்லை. உள்ளூர் மௐௐக்கள் தினமும் இவ்வழியாக சென்று வருவதால், இதனை அவர்கள் அறிவார்கள். ஆனால், வெளியூர் நபர்கள் இவ்வழியாக வரும் போது ராட்சஷ குழிகளில் வாகனங்கள் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், சர்வீஸ் சாலை அமைக்கப்படாமல் வெறும் ஜல்லி கற்கள் கொட்டியவாறு பணிகள் நடக்கின்றன. இதனால், அப்பகுதியில் புழுதிக் காற்று பறக்கிறது. காற்று மாசு அதிகரித்து காணப்படுகிறது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.'’ என்றனர்.



இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘பெரியநாயக்கண்பாளையம் மேம்பாலம் நான்கு வழிச்சாலையாக, 17.5 மீட்டர் அகலத்துடன் அமைக்கப்படுகிறது. இன்னும் ஓராண்டுக்குள் மேம்பாலம் கட்டுமானப் பணி முழுவதுமாக கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சர்வீஸ் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. போதுமான பாதுகாப்பு உபகரணங்கள், ஏற்பாடுகளுடன் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது.’’ என்றார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...