கிணத்துக்கடவு பகுதியில் 3,156 பேருக்கு தடுப்பூசி!

கிணத்துக்கடவு வட்டாரத்தில் 3,156 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கிணத்துக்கடவு வட்டாரத்தில் 3,156 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வதுஅலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனிடையே 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

கிணத்துக்கடவு வட்டாரத்துக்கு உட்பட்ட நல்லட்டிபாளையம், சொக்கனூர், வடசித்தூர் ஆகிய மூன்று ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

கடந்த வாரம் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால் தடுப்பூசி போடும் பணி தொய்வு ஏற்பட்டது. கொரோனா தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டதால் நேற்று முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கிணத்துக்கடவு வட்டாரத்தில் நேற்று 3,156 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் கொரோனா தடுப்பூசி போட ஆர்வமுள்ளவர்கள் கிணத்துக்கடவு வட்டாரத்தில் உள்ள நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேரடியாக வந்து போட்டுக் கொள்ளலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...