கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் சுற்றுச்சூழலைக் காக்க வலியுறுத்தி பொதுமக்கள் கருப்பு உடையில் நடைபயிற்சி மேற்கொண்டனர்.
கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் சுற்றுச்சூழலைக் காக்க வலியுறுத்தி பொதுமக்கள் கருப்பு உடையில் நடைபயிற்சி மேற்கொண்டனர்.
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட தாமஸ் பார்க் உள்ளிட்ட இடங்களை காக்க வலியுறுத்தியும், ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்ற பெயரில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் அழிந்து வரும் இயற்கை வளங்களை மீட்டு எடுக்க கோரியும் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மக்களின் இந்த போராட்டத்திற்கு மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் ஆர்.மகேந்திரன், சமூக ஆர்வலர் சலீம், காங்கிரஸ் கட்சியின் தெற்கு தொகுதி வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.

அப்போது பேசிய ஆர்.மகேந்திரன், “ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்தும் முன்பு இந்த பகுதி மக்களின் கருத்துகளை கேட்காமல் பல பணிகளை இந்த அரசு முன்னெடுத்துள்ளது. குறிப்பாக ரேஸ்கோர்ஸ் பகுதியில் பல மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.
ஏற்கனவே உள்ள தாமஸ் பார்க் நீக்கப்பட்டுள்ளது. இது குறித்து கேள்வி எழுப்பினால் மரங்கள் வெட்டப்படவில்லை என்றும் தாமஸ் பார்க் என்று ஒன்று இல்லவே இல்லை என்றும் விளக்கமளிப்பது ஏற்புடையது அல்ல.
வணிக அடிப்படையிலான திட்டங்களை மட்டுமே கருத்தில் கொண்டு அரசு செயல்படுகிறது. சுற்றுச்சூழலையும் அதைக் காக்கும் திட்டங்களையும் அரசு செயல்படுத்த வேண்டும்.
மக்களின் கருத்துகளை கேட்டு திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். விளையாட்டு திடல் தொடர்பாக இப்பகுதியை சீரமைப்பதாக கூறுகிறார்கள். ஆனால் விளையாட்டு திடல் அமைக்க மாநகரில் பல்வேறு இடங்கள் உள்ளன.

இப்பகுதியானது பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள அமைக்கப்பட்டதாகும். பல ஆயிரம் மக்கள் இங்கு நடைபயிற்சி மேற்கொள்ள வருகின்றனர். இதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்,” என்று கூறினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய சுற்றுச்சூழல் ஆர்வலர் சலீம்,
“ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் இப்பகுதியின் இயற்கை வளங்கள் பெரிதாக சிதைக்கப்பட்டுள்ளன. இந்த பகுதி பல காலமாக பசுமை நிறைந்த பகுதியாக இருந்தது.
எனவேதான் இந்தப் பகுதியில்காலை, மாலை வேளைகளில் மக்கள் பெரிதளவு நடைபயிற்சி மேற்கொண்டனர். ஆனால் இப்போது அவை அனைத்தும் நீக்கப்பட்டு மரங்கள் வெட்டப்பட்டு வெறும் அலங்கார விளக்குகள் மட்டும் பொருத்தப்பட்டுள்ளன.

பல எதிர்ப்புகளுக்கு பின் தாமஸ் பார்க்கை சீரமைத்து தருகிறோம் என்று கூறி இருக்கிறார்கள். கொரோனா நோய் தொற்று காலத்தில் மக்கள் பெருமளவு புத்துணர்ச்சி பெற இது போன்ற இயற்கை சூழல்கள் தான் உதவி செய்யும். அவற்றை அழிப்பது நியாயமல்ல. மேலும், மாநகராட்சி தரப்பில் இருந்து மரங்கள் வெட்டப் படவில்லை என்று கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாது.
அரசு கலைக்கல்லூரி அருகே இருந்த பூங்காவும் நீக்கப்பட்டுவிட்டது. இப்போது அந்த பகுதி போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகிவிட்டது. அதையும் மாநகராட்சி விரைந்து சரி செய்ய வேண்டும்,” என்று கூறினார்.