கோவை: தமிழகத்தில் கடந்த ஆண்டு காற்றாலை மூலம் 10 ஆயிரத்து 816 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்வதில் காற்றாலை மின் உற்பத்தி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியா முழுவதும் 38,000 மெகாவாட் மின் உற்பத்தி கட்டமைப்பு உள்ளது. இதில் தமிழகத்தில் 9,500 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி கட்டமைப்பு நிறுவப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் நடப்பாண்டிற்கான காற்றாலை மின் உற்பத்தி சீசன் ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கி உள்ளது. இது குறித்து இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தின்(IWPA) தலைவர் கஸ்தூரி ரங்கையன் கூறியதாவது:

“காற்று சீசன் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கி இருக்கிறது. ஆனால் இன்று வரை சீரான முறையில் காற்று வீசுவதில்லை. ஒவ்வொரு நாளும் காற்றின் வேகம் மாறுபடுகிறது. இதனால் காற்றாலை மூலம் நிலையான மின் உற்பத்தியை உறுதி செய்ய முடியவில்லை. எதிர்வரும் நாட்களில் சீரான முறையில் காற்று வீசத் தொடங்கும். மின் உற்பத்தியும் கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு காற்று சீசனில் காற்றாலைகள் வாயிலாக 10 ஆயிரத்து 816 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது இவ்வாண்டும் கடந்த ஆண்டை போலவே 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. சீசன் தொடங்கி உள்ளதால் காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் மத்தியில் மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.” இவ்வாறு அவர் கூறினார்.
பொதுவாக ஆண்டுதோறும் காற்றாலை மின் உற்பத்தி சீசன் மே கடைசியில் தொடங்கி செப்டம்பர் மாதத்தில் நிறைவடையும். ஆனால் கடந்த சில வருடங்களாக சீசன் முன்னரே தொடங்குவது குறிப்பிடத்தக்கது.