கோவை ஸ்மார்ட்‌ சிட்டி திட்டத்தின்கீழ்‌ ரேஸ்கோர்ஸ்‌ சாலை பணிகளுக்கு உயர்மட்ட குழு அனுமதி அளித்துள்ளதாக மாநகராட்சி விளக்கம்!

கோவை: கோவை ஸ்மார்ட்‌ சிட்டி திட்டத்தின்கீழ்‌ ரேஸ்கோர்ஸ்‌ சாலை பணிகளுக்கு உயர்மட்ட குழு அனுமதி அளித்துள்ளதாக மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.



கோவை: கோவை ஸ்மார்ட்‌ சிட்டி திட்டத்தின்கீழ்‌ ரேஸ்கோர்ஸ்‌ சாலை பணிகளுக்கு உயர்மட்ட குழு அனுமதி அளித்துள்ளதாக மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து மாநகராட்சி ஆணையர் அளித்துள்ள விளக்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது;

“ஸ்மார்ட்‌ சிட்டி திட்டத்தின்கீழ்‌ ரூ.40.67 கோடி மதிப்பீட்டில்‌ ரேஸ்கோர்ஸ்‌ சாலையை மாதிரி சாலையாக மாற்றியமைக்கும்‌ திட்டப்பணிக்கு 22.11.2018-ல்‌ மாநில உயர்மட்ட அனுமதி குழுவின்‌ நிர்வாக அனுமதி பெறப்பட்ட பிறகே பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. கடந்த 17 மற்றும் 19ம்தேதிகளில்‌ வெளியான நாளேடுகளில்‌ சுற்றுச்சூழல்‌ ஆர்வலர்‌ ஒருவர்‌, மேற்கூறிய ரேஸ்கோர்ஸ்‌ மாதரி சாலை திட்டத்தின்கீழ்‌ நடைபெற்றுவரும்‌ பணிகளுக்காக 70க்கும் மேலான மரங்கள் வெட்டப்பட்டு விட்டதாக குற்றம்‌ சாட்டப்பட்டி உள்ளார்.



தாமஸ்‌ பார்க்‌ பகுதியில்‌ உள்ள பசுமை சார்ந்த இடம் மாற்றி அமைக்கப்பட்டு வருவதாகவும்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மையில்‌ ரேஸ்கோர்ஸ்‌ பகுதியில்‌ ஒரு மரம்‌ கூட வெட்டப்படவில்லை மேற்படி திட்ட தளத்தில்‌ அடர்ந்த புதர்கள்‌ மற்றும்‌ செடிகள்‌ மட்டுமே அகற்றப்பட்டன. மேலும்‌ கூடுதல்‌ மரங்களை காலியாகவுள்ள இடங்களில்‌ நட உத்தேசிக்கப்பட்டு உள்ளது. எனவே, இச்செய்தி பொதுமக்களிடத்தில்‌ ஒரு தவறான தகவலினை பரப்புவதாக அமைந்துள்ளது.

மாதிரி சாலை திட்டம்‌ பொதுமக்கள்‌ மற்றும்‌ சுற்றுச்சூழல்‌ ஆர்வலர்களிடம்‌ கலந்தாலோசிக்கப்படவில்லை என கூறப்பட்டுள்ளதும் தவறு. இத்திட்டம்‌ தொடர்பாக ரேஸ்கோர்ஸ்‌ பகுதி மற்றும்‌ அதனை சார்ந்த குடியிருப்போர்‌ சங்கம்‌ மற்றும்‌ ரேஸ்கோர்ஸ்‌ நடைபயிற்சி செய்வோர்‌ சங்கம்‌ ஆகிய அமைப்புகளின்‌ பிரதிநிதிகளுடன்‌ மாநகராட்சி ஆலோசனைகளை கேட்டறிந்த பின்னரே பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

புகார்தாரர்‌ குறிப்பிடுவது போல்‌ ரேஸ்கோர்ஸ்‌ சாலையின்‌ அகலம்‌ குறுகியுள்ளதால்‌ போக்குவரத்து சிக்கல்‌ மற்றும்‌ மாசுபாடு ஏற்படுத்துகிறது என்பது அர்த்தமற்றவை. தெரு வடிவமைப்பிற்கான (Street Design) அனைத்து நிலையான நெறிமுறைகளையும்‌ பின்பற்றியே ரேஸ்கோர்ஸ்‌ சாலை அனைத்து பாதுகாப்பு அம்சங்களுடன்‌ கூடிய சாலையாக அமைக்கப்பட்டு வருகிறது.

மேலும்‌ ரேஸ்கோர்ஸ்‌ சாலையினை சுற்றிலும்‌ விளம்பர பதாகைகள்‌ நிறுவப்படும்‌ என்பது யூகங்கள்‌ மற்றும்‌ அனுமானங்களின்‌ அடிப்படையில்‌ அமைந்துள்ளது. அவ்வாறான திட்டம்‌ ஏதும்‌ இல்லை என தெரிவிக்கப்படூகிறது. தாமஸ்‌ பார்க் உண்மையில்‌ அது ஒரு பார்க்‌ அல்ல. பல ஆண்டுகளுக்கு முன்னர்‌ சரியான முறையில்‌ வடிவமைக்கப்படாமல்‌ நிறுவப்பெற்ற ஒரு போக்குவரத்து தீவு ஆகும்‌. எவ்வித போக்குவரத்து விதிகளையும்‌ பின்பற்றாமல்‌ நிறுவப்பட்டுள்ளது.

பயன்பாட்டிற்கு உகந்ததாக இல்லாத காரணத்தினால்‌ அதனை அகற்றி விட்டு அவ்விடத்தில்‌ புட்சால்‌ (பர்‌) எனப்படும்‌ விளையாட்டு மைதானம்‌ அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை பின்பற்றி காவல்‌ துறையினரின்‌ ஆலோசனையினை பெற்று புதியதாக ஒரு போக்குவரத்து தீவினை ஏற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.” இவ்வாறு மாநகராட்சி ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...