உதகை: உதகையில் கார்பைடு ரசாயன கற்களைக் கொண்டு செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.

தமிழகத்தில் தற்போது மாம்பழ சீசன் தொடங்கி உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு மொத்த மற்றும் சில்லறை கடைகளில் மாம்பழம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டுவரப்படும் மாங்காய்கள் கார்பைடு என்ற ரசாயன கற்கள் அல்லது பவுடர் மூலம் பழுக்க வைக்கப்பட்டு சந்தையில் விற்கப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.

இதனைத் தொடர்ந்து உதகை சந்தையில் ஆய்வு செய்த அதிகாரிகள் மாங்காய்கள் கொண்ட பெட்டிகளில் ஆங்காங்கே கார்பைடு ரசாயனபொடி பாக்கெட்டுகள் வைக்கப்பட்டு மாங்காய்களை பழுக்க வைப்பது தெரிய வந்தது. இந்த பவுடர் கொண்டு பழுக்க வைக்கும் மாம்பழங்களை சாப்பிட்டால், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட பல்வேறு உபாதைகள் ஏற்படும்.

எனவே சுகாதாரத்துறை அதிகாரிகள் சுமார் நூறு கிலோ மாம்பழங்களை பறிமுதல் செய்து அவற்றை பினாயில் ஊற்றி அழித்தனர். மீண்டும் இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று வியாபாரிகளை அதிகாரிகள் எச்சரித்தனர்.