நடிகர் விவேக் மரணத்தை விசிக தலைவர் தொல். திருமாவளவன் அரசியலாக்குவதாக பாஜக மாநில தலைவர் எல். முருகன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
திருப்பூர்: நடிகர் விவேக் மரணத்தை விசிக தலைவர் தொல். திருமாவளவன் அரசியலாக்குவதாகபாஜக மாநில தலைவர் எல். முருகன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பாரதிய ஜனதா கட்சியில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில்நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முருகன், தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது.

கொரோனா முதலாம் அலையை கட்டுப்படுத்தியது போல் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த ஒற்றுமையுடன் அரசின் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.
நடிகர் விவேக் மரணம் துக்கத்தை ஏற்படுத்துகிறது. சமூக சிந்தனையாளர் நடிகர் விவேக்கின் இழப்பு தமிழ்நாட்டிற்கே பேரிழப்பாகும். ஆனால் நடிகர் விவேக்கின் மரணம் குறித்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் அரசியல் செய்கிறார்.

தொல்.திருமாவளவன் இரண்டு முறை தடுப்பூசிபோட்டு கொண்டிருக்கிறார். பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும்.
நாடு முழுவதும் கோடிக்கணக்கானோர் தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகின்றனர், நடிகர் விவேக் தடுப்பூசி போட்ட அன்றைய தினம் 800 பேரும் நாட்டின் பிரதமர் மற்றும் முக்கிய தலைவர்களும்தடுப்பூசி போட்டுக்கொண்டனர். எனவே பொய் பிரச்சாரங்கள் செய்யவேண்டாம்
எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கிறார். கொரோனா காலங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை வழங்காமல் கொடைக்கானலில் தங்கி இருக்கிறார்.

தாராபுரம் தொகுதியில் வெற்றி பெற்றால் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான ரயில் பாதை அமைத்தல், தொழிற்பேட்டை, மகளிர் கலை கல்லூரி ஆகியவை எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்,”என்றார்.