நெகமம் அருகே பி ஏ பி கிளை வாய்க்காலில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு!

கோவை: நெகமம் அருகே பி ஏ பி கிளை வாய்க்காலில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: நெகமம் அருகே பி ஏ பி கிளை வாய்க்காலில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரது மகன் வினோத்குமார். இவர் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். தமிழ்ப் புத்தாண்டு விடுமுறையை கொண்டாட நெகமம் பகுதியில் உள்ள நண்பர் வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது அப்பகுதியில் உள்ள பிஏபி கிளை வாய்க்காலில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து, அங்கு விரைந்த நெகமம் போலீசார் நேற்று மாலை இறந்த நிலையில் இருந்த வினோத் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...