கோவை ஏர்போர்ஸ் நேவல் ஹவுஸிங் யூனிடில் முறையாக தண்ணீர் வழங்காததால் அப்பகுதி மக்கள் அவதி!

கோவை: கோவை ஏர்போர்ஸ் நேவல் ஹவுஸிங் யூனிடில் முறையாக தண்ணீர் வழங்கப்படாமல் இருப்பதால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.


கோவை: கோவை ஏர்போர்ஸ் நேவல் ஹவுஸிங் யூனிடில் முறையாக தண்ணீர் வழங்கப்படாமல் இருப்பதால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.



கோவை கணபதி அடுத்த அத்திப்பாளையம் பிரிவு பகுதியில் உள்ள ஏர்போர்ஸ் நேவல் ஹவுஸிங் யூனிடில் 372 வீடுகள் உள்ளது. அதில் 272 அப்பார்ட்மெண்ட் வீடுகளும், 100 தனித்தனி வீடுகளும் உள்ள இந்த குடியிருப்பில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

அடுக்குமாடி குடியிருப்புக்கும், தனித்தனி வீடுகளுக்கும் என ஒன்றாக இருந்து வந்த குடியிருப்போர் நல சங்கம் கடந்த 2018ம் ஆண்டு சில காரணங்களால் தனித்தனியாக பிரிந்து, 272 வீடுகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு தனி சங்கமும் 100 தனி வீடுகளை கொண்ட குடியிருப்பு பகுதிக்கு தனி சங்கமும் உருவானது.

இதையடுத்து, ஒட்டுமொத்தமாக குடியிருப்பு பகுதியில் நடைபெறும் பராமரிப்பு பணிகள், குடிதண்ணீர் தெருவிளக்குகள் மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்காக ஒவ்வொரு வீட்டிற்கும் மாதம் தோறும் குறிப்பிட்ட தொகை வசூலித்து தனி வீடுகளை கொண்ட சங்கத்தினர் தங்கள் சங்கம் மூலம் வசூலிக்கும் தொகையை மற்றொரு சங்கத்திற்கு கொடுத்தாக கூறப்படுகிறது.



272 அடுக்குமாடி வீடுகளை கொண்ட சங்கத்தின் நிர்வாகிகள் தண்ணீர் விடுதல் மின்சாரம் உள்ளிட்ட பொது பராமரிப்பு பணிகளை செய்து வந்தனர். அதனை தொடர்ந்து 100 தனி குடியிருப்பு வீடுகளை கொண்ட பகுதியினில் குடியிருக்கும் குடியிருப்புவாசிகள் தங்களது பராமரிப்பு கட்டணத்தை தங்கள் சங்கத்தில் தான் நேரடியாக செலுத்த வேண்டுமென்று நெருக்கடி கொடுத்துள்ளனர்.

இதை 100 தனி குடியிருப்புகள் கொண்ட சங்கத்தினர் மறுத்ததால் அவ்வப்போது 272 அடுக்குமாடி வீடுகளைக் கொண்ட குடியிருப்பு சங்கத்தினர் நூறு குடியிருப்பு வீடுகளுக்கு தண்ணீர் வழங்காமல் பிரச்சனை செய்து வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், நேற்று மாலை முதல் 100 தனி குடியிருப்பு வீடுகளுக்கு தண்ணீர் வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டதால் தனி குடியிருப்பு பகுதியை சேர்ந்த மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதை தொடர்ந்து இன்று காலை பொதுமக்கள் குடியிருப்பின் பகுதியின் முன்பு திரண்டு சரவணம்பட்டி போலீசாரிடம் புகார் அளித்தனர்.



இதையடுத்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சரவணம்பட்டி போலீசார், இன்ஸ்பெக்டர் திருப்பதி தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தியதில், தண்ணீர் பயன்பாட்டிற்கு வழங்காமல் நிறுத்தி வைத்தது தவறு எனவும், முதலில் தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் இதுகுறித்து உதவி ஆணையர் அலுவலகத்தில் பேசி பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என்று கூறியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றதாக தெரிவித்தனர்.

பின்னர் தனிக் குடியிருப்பு பகுதிக்கு தனியான குடிநீர் சுத்திகரிப்பு ஆலையை அமைத்துக் கொள்ளக் போதிய இடம் மற்றும் பொருளாதார வசதிகள் தங்களிடம் கிடையாது என்று தெரிவித்தனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...