திருப்பூர்: திருப்பூர் பல்லடம் சாலையில் வங்கியில் பணம் எடுத்து வெளியே வந்த வெங்கடாச்சலம் என்பவரிடம் இருந்து மர்ம நபர்கள் 8 லட்சம் வழிப்பறி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் குன்னாங்கல்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாச்சலம் (62). சாய ஆலை நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் இன்று பல்லடம் சாலை வித்யாலயம் பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கிக்கு காரில் வந்து வங்கியில் தொழில் நிமித்தமாக ரூ. 8 லட்சம் பணத்தை எடுத்துள்ளார்.
அப்போது காரில் பணத்தை வைத்துவிட்டு வண்டியை எடுக்க முயன்றுள்ளார். அவரை பின் தொடர்ந்து வெளியிருந்து வந்த ஒருவர் வெங்கடாச்சலத்தின் இடுப்பை கிள்ளி உள்ளார். யாரென்று பார்ப்பதற்குள், மற்றொருவர் காரில் முன் இருக்கையில் வைத்திருந்த ரூ. 8 லட்சத்தை எடுத்துக்கொண்டு, அங்கிருந்த இருசக்கர வாகனத்தில் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பினர். கண்ணிமைக்கும் நேரத்தில் பணம் பறிபோனதை கண்டு வெங்கடாசலம் அலறினார்.

இது தொடர்பாக வீரபாண்டி போலீஸாருக்கு அளித்த தகவலின் பேரில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். மர்ம நபர்கள் இருவரும் வங்கியில் வெங்கடாசலம் பணம் எடுப்பதை நோட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இதையடுத்து, அவர் பணத்தை எடுத்து வெளியே வந்தபோது, அவரது கவனத்தை திசை திருப்பி நூதன முறையில் பணத்தை வழிப்பறி செய்துள்ளனர்.

இது தொடர்பாக வங்கியில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகள் கொண்டு, போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.